Tuesday, May 5, 2015

Periyava : Anusham today & tomorrow : En nadanthir aiya, baaratha bumi surri?

Written on 05.05.2015

இன்றும் சரி, நாளையும் சரி, அனுஷம். இரட்டிப்புக் கொண்டாட்டம். இரண்டு நாளுமே, பெரியவா பூஜைகள். ஊர்வலங்கள்.

பெரிய அனுக்ரஹம்தான்!

நாளை, Bangalore JP Nagar ல், ஒரு அடியாரின் இல்லத்தில், பெரியவாளின் பாதுககளுக்குப் பூஜை.

அந்தப் பாதுகைகள்தான் என்ன தவம் செய்தவை! பெரியவாள் பாதத்தை அனுதினமும் தாங்கிச் சுற்றியவை. மும்முறை, பெரியவாளின் பாதத்தைத் தாங்கிக்கொண்டு, பாரதம் முழுக்க வலம் வந்தவை. இந்த பாரத பூமி முழுக்க இருக்கும் அடியார்கள் அனைவருக்கும் பெரியவாளின் தரிசனம் கிடைக்கக் காரணமாய் இருந்தவை.

இப்படி சிந்தனை செல்லும்போது, பெரியவாள் ஏன் இந்த பாரதத்தை மும்முறை வலம்வர வேண்டும் என்று உள்ளே ஒரு கேள்வி எழுகிறது.

முதல் முறை, 20 வருட யாத்திரை. இரண்டாவது முறை, ஆந்திராவில் யாத்திரை. மூன்றாவது முறை, தனது 80 ஆவது வயதில், 6 வருடம், ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்டிராவெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பிய யாத்திரை.

ஒரு நாளைக்கு 12 km எனத் தனது 80 ஆவது வயதில் ஏனிப்படி பெரியவாள் நடக்க வேண்டும்?

எல்லாம் நமக்காகத்தான்.

உற்சவ மூர்த்தி, புறப்பாடு ஆகி, தனது கோவிலுக்கு வர முடியாதவருக்கும் தரிசனம் தருவது போல, எங்கெங்கோ இருப்பவருக்கும் நடையாய் நடந்து தரிசனம்!

இப்படி, பெரியவாளின் நடையையும், பக்தர்களுக்காக அந்த தெய்வம் தனது உடல் வருத்தம் ஏதும் பாராமல் நடந்து சென்றது பற்றியும் சிந்தனை செய்யும்போது, சற்றே வேடிக்கையாக ஒன்று தோன்றியது.

அத்தனை தெய்வங்களும் "நாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுகிறோம், நீயே எங்களுக்கெல்லாம் சேர்த்து சுற்றிவிட்டு வா" என்று சொல்லியிருக்குமோ?

இந்த பாரத தேசம் முழுக்க இருக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் சேர்த்தே பெரியவா நடந்து சென்றார்களோ என்று தோன்றியது! அத்தனை தெய்வங்களும் குடியிருக்கும் மூர்த்தி அன்றோ நம் பெரியவா!

பெரியவா தரிசனம் தந்தால், அத்தனை தெய்வங்களும் தரிசனம் தந்தார்போல்தானே!
இந்த, சற்றே வேடிக்கையான சிந்தனையை வெளிப்படுத்துவது போல, பெரியவா மேல், ஒரு சிறிய பாமாலை.
பெரியவா சரணம்.
____________________________________________________
எத்தனை தெய்வம் உண்டு பாரத பூமி தன்னில்!
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?

கணபதிக் கந்தனும், மாயனும் சிவனும்
கூத்தனும், சக்தியும், திருவும், வாணியும்
அத்தனை தெய்வம் இருக்க, பாரத பூமி முற்றும்,
எங்களைக் காக்கவென்று ஏன் ஐயனே சுற்றி வந்தீர்?

இன்னலை நீக்கவென்றே, ப்ரணவனாய் வந்த பிள்ளை
மோதகம் உண்டு சற்றே, ஓய்வாய் இருந்ததாலோ?

அடியார்கள் வாழ என்றே, அறுமுகம் கொண்ட பிள்ளை
பழம் வேண்டி கோபம் கொண்டு, பழனிக்குச் சென்றதாலோ?

உலகத்தைக் காக்கவென்றே, அவதாரம் செய்த அந்த
கண்ணனாம் மாயன் இங்கே, பாற்கடல் படுத்ததாலோ?

தீமைகள் அழிந்து என்றும், மங்கலம் பொங்க வந்த
சிவனுமே சிவனேயென்று, சுடலையில் இருந்ததாலோ?

ஆனந்தமாக இந்த, அவனியை வாழச் செய்யும்
தில்லையின் ராஜன் கூத்தில், தன்னையே மறந்ததாலோ?

திருவருள் பெருகி எங்கும், குறையெலாம் நீங்கச் செய்யும்
திருவுமே, காந்தன் நெஞ்சில், குடி கொண்டு விட்டதாலோ?

கல்வியே சிறந்து எங்கும், ஞானமே வளர்க்கும் செல்வி
கோவிலே இல்லை என்று, கோபமாய்ச் சென்றதாலோ?

எத்தனை தெய்வம் உண்டு பாரத பூமி தன்னில்!
அத்தனை தெய்வங்களும் இருந்தே இளைப்பாற, ஏன்
நடையாய் நடந்து இங்கே, மும்முறை சுற்றி வந்தீர்?
பாரத பூமி காக்க, மொத்தமாய் பாடுபட்டீர்?


Periyava : Anandhak kuththadum Natarajane : Chidambaram Nataraja Temple Kumbabishekam

Written on 30.04.2015

நாளை, 01-05-2015, வெள்ளிக்கிழமை அன்று, சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா. கடைசியாக, 1987 ஆம் வருஷம்தான் கும்பாபிஷேகம் நடந்தது. 28 வருஷங்களுக்கு அப்புறம், இப்போது நடக்க இருக்கிறது. 



ஆனந்தமே வடிவான அந்தக் கூத்தனின் கும்பாபிஷேகப் பெருவிழாவினை நேரிலே காண்பவர்கள், கொடுத்து வைத்தவர்கள்தான்! 

சகல தத்வங்களும் நிறைந்த வடிவான அந்த ஆனந்த நடராஜ மூர்த்தியை, ஒரு தத்துவமும் அறியாத நானும் துதிக்க அனுக்ரஹம் அளித்த அந்தப் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு நமஸ்காரங்கள். 

அந்தத் தில்லை நடராஜ மூர்த்தி மேலே சிறியவன், அடியேனின் அர்ப்பணமாக, ஒரு பாமாலை :

("ஆடுகின்றானடி தில்லையிலே" மெட்டு)



ஆனந்தக் கூத்தாடும் நடராஜனே 
சச்சிதானந்தக் கூத்தாடும் நடராஜனே 
மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன் 
என்மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன் - நீ (ஆனந்த)

நீராட நெருப்பாட தானாடினாய் 
சடையாட இடையாட ஜதியடினாய் (ஆனந்த)

குழலாட புனலாட நடமாடினாய்
பெண்ணாட அதை விஞ்சி குழை சூடினாய் (ஆனந்த)

இரவாட பகலாட சதிராடினாய்
பிறையாட மறையாட இறையாடினாய் (ஆனந்த)

மானாட மழுவாட கோனாடினாய்
விண்ணாட மண்ணாட விளையாடினாய் (ஆனந்த)

உலகென்னும் மேடையில் நீயாடினாய்
உயிர்களை ஆட்டியே கூத்தாடினாய் (ஆனந்த)

நீயாட உலகங்கள் தானாடுமே!
உலகாளும் அரசாட, மனமாடுமே (ஆனந்த)
முயலகன் மீதாடும் நடராஜனே!
மயங்குமென் மனம்மீதும் ஆடாய் நீயே (ஆனந்த)

Periyava : Periyava Ashthoththara Sadha Namavali Stotra : 13

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்


The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman


Tamil poems by Visvanathan



பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



"கருணாரச கல்லோல கடாக்ஷாய நமோ நம" (13)



"கருணாரச பெருக்கு வெள்ளமாகிய கடாக்ஷம் கொண்டவருக்கு நமஸ்காரம்" (13)


"Obeisance to Him whose glance is a flood of kindness and mercy" (13)





தருணம் இதென்று ஏதும் பாராமல் எல்லாப்போதும்

 வருணனின் கொடையேபோல உலகத்து மாந்தர்க்கெல்லாம்

கருணையின் வெள்ளம் இங்கே கண்வழி பெருக்கிக்காக்கும்

குருமுனி சங்கரன்தாள் வணங்கினோம் போற்றி போற்றி (13)

Sunday, May 3, 2015

Periyava : Ashtoththara Sadha Namavali Stotram : 12

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம் : 12

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



"பாரதீக்ருத ஜிஹ்வாக்ர நர்த்தனாய நமோ நம" (12)


"ஸரஸ்வதியே நடனம் புரிகிர நாக்குடையவருக்கு நமஸ்காரம்" (12)


"Obeisance to Him on whose tongue Saraswati Devi herself dances" (12)






கலைவாணி தவம்செய்து கமலம் நீங்கி சீர்
திகழ்வாணியாய் வந்து நாவில் நடம்செய்புகழ்
கமழ்வாணிவந்திங் கெமக்கு நித்தம்
அருள்வாணிஇந்திர சரஸ்வதிதாள் போற்றி போற்றி (12)

Saturday, May 2, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram :11

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஸ்ரீ சங்கர பதாம்போஜ சிந்தனாய நமோ நம" (11)

"ஸ்ரீ சங்கராசார்யருடைய பாத கமலத்தின் மீது சிந்தனை கொண்டவருக்கு நமஸ்காரம்"
(11)
"Obeisance to Him whose mind is on the lotus feet of Sri Sankara" (11)



சங்கரன் வடிவாய்வந்த சம்கர மூர்த்திதன்னின்
பங்கயமொத்த பாதம் நெஞ்சிலே சுமந்து நின்று
சங்கர ஜயந்தி ஒன்றில் பண்டிகை எல்லாம் கண்ட
மங்கல மூர்த்தி பாதம் வணங்கினோம் போற்றி போற்றி (11)

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram (10): Kalidosha nivruthyeka karanaya Namo nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


கலிதோஷ நிவ்ருத்த்யேக காரணாய நமோ நம:” (10)

“கலிகாலத்தின் தோஷங்களை நிவ்ருத்தி பண்ணிக் கொள்வதற்கு ஒரே காரணமானவருக்கு நமஸ்காரம்” (10)

“Obeisance to the only source of relief from the afflictions of Kali Yuga” (10)


வேதம் ஓதா வேதியர் மலியவும்


மாதர் தாமும் நாணம் மறக்கவும்

பாதகம் செய்திடும் கலியையே அழித்திட

நாதன் தாளொன்றே துணையென்று
வணங்குவோம் (10)

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali stotram (9) : Kamakoti mahapeetadheechvaraya namo nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்



“காமகோடி மஹாபீடாதீச்வராய நமோ நம:” (9)

“காமகோடி மஹா பீடத்திற்கு அதிபதியானவர்க்கு நமஸ்காரம்” (9)

“Obeisance to the ruling head of the Kamakoti peetam” (9)


ஜன்மபயமகற்றும் பீடம், கர்மவினையழிக்கும் பீடம்
துன்பநிலை துடைக்கும் பீடம், காமகோடி மஹாபீடம்
இன்பநிலை சேர்க்கும் பீடம், இனிதுவந்தமர்ந்த எந்தாய்,
அன்புநிலையளித்து ஆளும் அரசனே, போற்றி போற்றி (9)