Tuesday, June 23, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 63

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman


Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி 
தீர்த்தம் அர்ப்பணம்

"இஹாமுத்ரார்த வைராக்ய சித்திதாய நமோ நமஹ:" (63)

"இஹத்திலும் பரத்திலும் பொருள் ஆசை அற்ற வைராக்ய சித்தி 
கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (63)

"Obeisance to Him who helps people to achieve the unattached state in this birth

and  
after" (63)


பொருள்நீ என்றெமக்குணர்த்தி நீயல்லது வேறோர்
பொருட் பற்றத்தனையும் அழித்தகத்திலே சுடரரும்
பொருளாய் இகமும் பரமுமென்றும் பொலியுமரும்
பொருளே! இறையே! வந்தெழுந்தருளுகவே! (63)

Monday, June 22, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 62

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the 
publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri 
Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi 
Venkatraman

Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



"ப்ரத்யேக ரசாகன்ட சித்சுகாய நமோ நமஹ:" (62)


"ஒவ்வொருவரிடத்திலும் உள்னோக்கால் பெறுகிற ஒரேவிதமான துண்டிக்க முடியாத பேரறிவாகவும் ஆனந்தமாகவும் இருப்பவருக்கு நமஸ்காரம்" (62)


"Obeisance to Him who, is the unitary divisionless pure consciousness of Ananda in each individual" (62)  


எங்கும் நிறைந்திருக்கும் பெரும் பேரறிவு நீ
பொங்குமானந்த மாகடல் வெள்ளம் நீ
பங்கமில் பெருங்கருணை பேரின்பப் பெருக்கு நீ
எங்களின்னுயிரும் நீ இறைவன் நீ போற்றி போற்றி (62)

Sunday, June 21, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 61

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"நித்யானித்ய விவேகப் ப்ரதாயகாய நமோ நமஹ:" (61)

"நித்யமானவைகளைப் பற்றியும் அனித்யமானவைகளைப் பற்றியும் விவேகத்தைக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (61)

"Obeisance to Him who teaches the discrimination between the transient and the eternal" (61)

எது நிரந்தரமிங்கே எது பூர்ண சுகமிங்கே
எது வாழ்வில் வளம் சேர்க்கும் எது மரண பயம் போக்கும்
அது அறிவித்து அல்லவையும் அறியுமருள் செய்திங்கே
அதுவேயாம் சிவனான குருநாதன் பதம் போற்றி (61)

Saturday, June 20, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 60

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from 
the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, 
Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. 
Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி

தீர்த்தம் அர்ப்பணம்



"அகண்டைக ரசானந்த ப்ரபோதாய நமோ நமஹ:" (60)


"துண்டிக்க முடியாத ஆனந்த ரசத்தை ஜனங்களின் மனதில் எழுப்பிக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (60)



"Obeisance to Him who awakens the divisionless sublime Ananda among people" (60)  



ஆனந்த சாகரத்தை உள்நிறை அமுதஊற்றை
வானந்தமான அந்த விள்ளவொண்ணாப் பெரும்நிறைவை
தானந்தமான நிலை தனையருளும் என்னரசே
நானந்தமாகி உன்னை அடைந்திடவே அருளுகவே (60)

Friday, June 19, 2015

Gananathane : Raagam : Ranjani

ராகம் :ரஞ்சனி

கணநாதனே  ஓம்காரனே
குணசாகரனேதயாசாகரனே (பல்லவி)

ஆனந்தஸ்வரூபகஜராஜனே
மோதகப்ரியனேவிக்னராஜனே (அனுபல்லவி)

தஞ்சம்என்றுவந்தோர்குறைதீர்ப்பவனே 
ரஞ்சனிப்ரியனேகௌரிசுதனே (சரணம்)


Mohanane Jagath karanane : Raagam : Mohanam

ராகம் :மோஹனம்

மோஹனனே ஜகன் மோஹனன் ஹரன் பெற்ற
பூரணணே ஜகத் காரணணே (மோஹனனே)

ஸபரி மலை வாழும் கோமகனே
ஸகல சௌபாக்யம் தரும் ஐயப்பனே (மோஹனனே)

இருமுடிகட்டி, விரதம் இருந்து 
உனைக் காண வருவோர் வினை தீர்ப்பவனே
ஓம்கார ரூபனின் தம்பியே எங்கள் நம்பியே
உன்னை நம்பி வந்தோம் ஐயனே (மோஹனனே)

Mayon Marugane Shanmugane : Raagam : Hindolam

ராகம் :ஹிந்தோளம்

மாயோன்மருகனே - முருகனே
தாயெனஎமைக்காக்கும்ஷண்முகனே, குஹனே (பல்லவி)

மறைபொருள்உணர்த்திடும்சுப்ரமண்யனே
உறுபகைஅழித்திடும்சக்திவேலவனே (அனுபல்லவி)

குருவடிவாய்வந்ததிருப்புகழ்தேவனே
அருட்கடலாயிருக்கும்கண்டனேகுமரனே (சரணம்)