21.09.2016 : கிருத்திகை நாள்
இன்று, கிருத்திகை.
கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது, அவர் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைய பாடல் : "கைத்தல நிறைகனி" மெட்டில்.
"தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதானா"
இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.
*******************************************
எக்கண முனைநினை புத்தியொ டுனதடி
உற்றிடு நலமருள் யதிராஜா!

நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்
சித்தம துறைஎழில் - சிவரூபா!
பக்தியொ டுனதடி பற்றிடு மெவரையும்
முக்திகொ டருளிடு - உமைபாலா!
பங்கயப் பதமலர் நொந்திட கடிதுவன்
தெங்களுக்கருளிடும் - குருனாதா!
உற்றிடு நலமருள் யதிராஜா!
அற்பனென் உளமதை சற்குரு உறைதிரு
நற்பத மெனகதி தருவாயே!
கற்பக மெனவொரு அற்புத மதுசெயும்
பொற்பத மலரதை அருள்வாயே!
No comments:
Post a Comment