15.11.2016 : நேற்று கிருத்திகை நாள்
************************************************************
கிருத்திகை தோறும், ஒரு திருப்புகழ் சந்தத்திலே அந்த ஸ்வாமிநாதனே வடிவாய் வந்த நம் அன்பு குருநாதனை, பெரியவாளைப் பாடும் பேற்றினை, இந்தக் கிருத்திகைக்கிம் கொடுத்த பதமலர்களைப் போற்றி, இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்.
***************************************************************************
"தண்டையணி வெண்டையும்" என்ற திருப்புகழ் சந்தம் :
தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் – தந்ததான
*************************************************************************
அண்டபகி ரண்டமும் கண்டுளம கிழ்ந்திடும்
வந்தடிப ணிந்திடும் எங்கள் ஈசா!
தண்டமுடன் வந்திடும் செந்தமிழும் தந்திடும்
விந்தைபல செய்திடும் கஞ்சி நாதா!
இந்தபுவி எங்கணும் தன்பதமும் அன்பொடு
தந்தருளி நின்றஎம் செந்தில் நாதா!
அந்தமிலி உன்பதம் என்மனமுறைந்திடும்
அந்தவொரு இன்பமும் தந்திடாயோ
அந்தகனு மஞ்சிடும் முந்தைவினை துஞ்சிடும்
தண்ணருளும் உன்முகம் தந்திடாதோ
தஞ்சமென உன்பதம் சந்ததம் நினைந்திடும்
நெஞ்சமதும் தந்தருள் எம்பிரானே!
அஞ்சலென நின்றரும் செந்திரு கரம்தரும்
சுந்தரனை எந்தையை சிந்தைகூர
துன்பநிலை வெஞ்சமர் சஞ்சலம ழிந்திடும்
இன்பமிகும் எங்கிலும் உண்மைதானே!
No comments:
Post a Comment