01.04.2017 : கிருத்திகை நன்னாள்
நேற்றும், இன்றும் கிருத்திகை. ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த குருபரனேயான பெரியவாளின் மேல் ஒரு பாமாலையை, குருபரன் மகிழ்ந்த திருப்புகழின் ஒரு சந்தத்திலே புனைந்து அணிவிப்பது, அந்தப் பெரியவாளின் கருணையினால், இன்றும் தொடர்கிறது.

"ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு
மூரைச் சேவித் ...... தறியேனே" என்று வரும்
பாடலின் சந்தத்திலே, இன்றைய பாடல்.
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான என்ற சந்தம்.
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான என்ற சந்தம்.
ஒருகணமு முனதுபதம்
தேடிச் சேவித் தறியேனே
உனதுவுரை எனதுவழி யாகப் போகக் கிடையேனே
திருவருளை
முழுமனது மாகத் தேடிச் சுகியேனே
குருபரனை எனதுவுயி ராகப் பாவித் துணரேனே
அகமதனி
லுனையறியு மார்கம் ஏதும் தெரியேனே
உயிரதனி லுனையெழுதி நாளும் வாழக் கிடையேனே
புவியதனி
லுனதுபத மேவும் சீலம் அருள்வாயே
உனதருளி லனுதினமும் வாழும் கோலம் அருள்வாயே