பல்லவி:
ஆஞ்சனேயன் எனும் அற்புதன் வரதன்
வாஞ்சையோடு துயர் தீர்த்திடும் அழகன்
அனுபல்லவி
பாடிக் கேட்கும் வரம் யாவையும் தருவான்
நாடிடும் அடியவர்க்குறு துணையாவான்
சரணம்
சுந்தரன் மாருதி ராம நாமமெனும்
மந்திரம் கொண்டு தாய் துன்பத்தைத் தீர்த்தான்
வந்தனை செய்திடும் அடியவர் வாழ்வினில்
சந்ததம் நன்னலம் பொங்கிடச் செய்வான்
சுந்தர ஆஞ்சனேய ஸ்வாமிக்கு சமர்ப்பணம்.
ஸ்ரீ மஹா பெரியவா பாத கமலங்கள் சரணம், உங்களின் பதிவுகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழின் அழகு கொஞ்சும் சொற்களில் பெரியவாளின் பெருமைதனை பாடி பரவசம் கொள்ள அருமையான பதிவு. எனது அலைபேசி எண் 9384631507. தயவுசெய்து என்னுடன் பேசுங்கள். தாங்கள் எழுதிய பெரியவா சரிதத்தை வரைபடப் பதிவாக உருவாக்க ஸ்ரீ மஹா பெரியவா அனுக்ரஹத்தில் முயற்சிப்போம்
ReplyDelete