Saturday, September 19, 2015

19.9.2015 : அனுஷம் : நின் மனம் உருகாதோ?

இன்று அனுஷம். காலை, பெரியவா பூஜை செய்ய முடியவில்லை. நேற்றும், பயணம். பூஜை இல்லை. பெரியவாளுக்கு இன்று, எல்லா இடங்களிலும் அமோகமாக அனுஷ பூஜை நடந்திருக்கும். அதிலும் கலந்து கொள்ள இயலா நிலமை இன்று. 

அப்பா, உனக்கு என்மேல், அப்படி என்ன கோபம்? 


உள்ளம்  உருகி   நின்றுனை  நினைத்தென்
       உடல்  சோர்ந்தாவி அழியக் கண்ணீரெங்கும் 
வெள்ளமாய்ப் பெருக விம்மி விம்மிக் 
        கதறி உனை அழைத்து நீ வராமல் 
விள்ளொணாத் துக்கம் நெஞ்சடைக்கக் கண்ணிருள 
        வாய் குழறி பதைத்து விழுந்திங்கு 
அள்ளியெடுக்க நீயிலாமல் தரையெங்கும் நான் 
       அழுது புரண்டரற்றியும் நின்மனம் உருகாதோ? (1)

காணும் காட்சியெலாம் நீயாகச் சிந்தை 
         யாவுமே உனதருள்முகம் நிறைய என்னைப்  
பேணுமோர் பெற்றியனைத் தாயெனவே கண்டுன்பதம் 
          மேவிடும் வழிதேடி அலைந்தலைந்திளைத்திங்கே 
வேணுமோர் வரமிதென்றுன் பதமடை சூட்சுமம் 
         தேடியே மிகவாடி என்றுமுன் நாமமே 
மாணப் பெரிதெனக் கூவியழைத்தறற்றியும்
          அன்புருவாம் நின்மனமெனக்காய் உருகாதோ? (2)

No comments:

Post a Comment