Wednesday, July 27, 2016

28.07.2016 கிருத்திகை நாள் : செல்வமகள் பால ஸ்வாமி நாத!

இன்று, கிருத்திகை. இந்த நாளிலே, அந்த அறுமுகனை, அந்த ஸ்வாமிநாதனைப் பணிவதும், எங்கள் ஐயனாம் ஸ்வாமிநாதனாய் வந்து சந்திரசேகரனாய் மலர்ந்தானைத்  தொழுவதும் ஒன்றுதானே என்று தோன்றியது.

அருணகிரியார் அளித்த "முந்து தமிழ் மாலை"  சந்தத்திலேயே, எங்கள் ஐயனையும் பாடுவதும் பெரிய சந்தோஷம்தான்.


செல்வமகள் பால ஸ்வாமி நாத!
           பல்கும் புகழ்க் கார! தேவ நாத!
                   பந்தமறுத் தாளும் ஆதி நாத!.....சுகுமாரா!

 கொள்ளைச் சிரிப்போடு காட்சி தாரும்!
              பள்ளமிந்த வாழ்வு காத்துத் தாரும்!
                     வெள்ளமென ஆசி நீரே தாரும் ..........என்னையா!

தொல்லைவினை போகத் தேடி தேடி
                நல்ல குரு பாதம் நாடி நாடி
           சொல்லி முடியாத நாமம் பாடி………வருவோமே!

தெள்ளு தமிழ் ஞான நீதிக்கார
     கொள்ளைச் சிரிப்பூறும் ஹாஸ்யக்கார
           அள்ளக் குறையாத நேசக்கார…….வருவாயே!

சிந்தைமிசை ஏகி தீதை நீக்கி
        மந்தமதி வாதை தானும் போக்கி
               உந்தன் பதம் நாடும் ஆவல் ஆக்கி......அருள்வாயே!

கஞ்சி நகர் வாழும் ஜாலக்கார
    பஞ்சம் பிணி போக்கும் நேயக்கார

        அஞ்சும் மனம் ஆற்றும் காவல்கார…..பெருமாளே

No comments:

Post a Comment