Written on 9.04.2015
Yesterday, Anusham.Periyava's star. I was planning to join the Anusham celebrations happening across Bangalore...but Periyava's thiruvulam was different...had to go to Delhi for couple of meetings...though I love what I do professionally, yesterday was one exception...I longed to be here to take part in the celebrations...but not to be...briefly thought how true azvar's lines : "பிறர்க்கே உழைத்து ஏழையானேன்" were...

As I kept comparing the poses of Krishna and Periyava, I also started comparing both JagadGurus. A small poem resulted.
பாடல், பெரியவாளின், பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பணம்:
Just like those Godly crossed legs, the poem also crosses between Krishna and Periyava. The first two stanzas are about Krishna and the next two are about Periyava.
மாமாயன் மாதவன் ஜகன்மோஹனக் கண்ணன்
மாமாயை செய்து நம்மை ஏமாற்றி நின்றிருப்பான்
கால் மற்றி நின்றிருக்கும் ஜகன்மோஹன ரூபம்
ஏமாற்றி நிற்கும், தான், "தெய்வமிலை" எனச் சொல்லி (1)
கள்ளப் புன்சிரிப்பால் மயக்கிடும் கண்ணனவன்
தெள்ளமுதாய்த் தேனாய்ப் பேசியே ஏய்த்திடுவான்
வெள்ளமெனப் பெருகும் கருணையால் காஞ்சி முனி
உள்ளமெல்லாம் கவரும் கள்வனாய் நின்றிருப்பார் (2)

உலகெலாம் காக்கும் கண்ணன், பிறந்ததும் வீட்டை விட்டான்
நிலவுமே தூங்கும் நேரம், வேறு ஓர் வீடு சென்றான்
விழுப்புரம் பிறந்தார் சற்றே வளர்ந்ததும் வீட்டை விட்டார்
தொழுதகை தொண்டராக, உறவெலாம் விட்டு விட்டார் (3)
நிலவுமே தூங்கும் நேரம், வேறு ஓர் வீடு சென்றான்
விழுப்புரம் பிறந்தார் சற்றே வளர்ந்ததும் வீட்டை விட்டார்
தொழுதகை தொண்டராக, உறவெலாம் விட்டு விட்டார் (3)
சின்னக் குழந்தையாய், சிங்காரமாய் வருவான்.
எண்ணம் இனித்துவிட, கிள்ளை மொழி பேசிடுவான்.
பச்சைக் குழந்தையைப் போல், பால் மாறாப் பிள்ளையைப் போல்,
இச்சகம் தன்னையிங்கோர் புன்னகையால் வென்றிடுவார். (4)
எண்ணம் இனித்துவிட, கிள்ளை மொழி பேசிடுவான்.
பச்சைக் குழந்தையைப் போல், பால் மாறாப் பிள்ளையைப் போல்,
இச்சகம் தன்னையிங்கோர் புன்னகையால் வென்றிடுவார். (4)
வெண்ணை திருடிடுவான். "தானில்லை" என்று சொல்வான்.
தன்னைப் பிடிக்க வந்தால், குறு நகையால் மயக்கிடுவான்.
கன்மம் அகற்றிடுவார். 'நானில்லை' என்று சொல்வார்.
"கடவுள் நீ" எனச் சொன்னால், புன் சிரிப்பால் விடையளிப்பார். (5)
வேய்ங்குழல் எடுத்து ஒரு வேணு கானம் செய்வான்
தீங்கிசையிலிங்கு மனம் மயக்கியே நின்றிடுவான்.
இதமான உபதேசம், இன்னிசையாய் இங்கொலிக்கும்
சமயத்தில் மௌனமும், சங்கீதமாயிருக்கும் (6)

கடவுள்தான் என்றாலும், இடையன் போல் நடித்திடுவான்.
கடும்குற்றம் செய்தாலும், பொறுத்திங்கே காத்திடுவான்.
நடமாடும் தெய்வம்தான். நாடகமோ, மானிடன்போல்.
அடும்செய்கை செய்தாலும், இதமாகத் திருத்திடுவார். (7)
கடும்குற்றம் செய்தாலும், பொறுத்திங்கே காத்திடுவான்.
நடமாடும் தெய்வம்தான். நாடகமோ, மானிடன்போல்.
அடும்செய்கை செய்தாலும், இதமாகத் திருத்திடுவார். (7)
சக்கரம் ஏந்தும் கையன், வேய்ங்குழல் எந்தி நின்றான்!
பக்குவமாக இங்கு பாதையே காட்டி நின்றான்!
புன்சிரிப்பாலே அன்று முப்புரம் எரித்த மூர்த்தி,
கமண்டலம் தண்டம் கொண்டு உலகெலாம் வணங்க நின்றார் (8)
பக்குவமாக இங்கு பாதையே காட்டி நின்றான்!
புன்சிரிப்பாலே அன்று முப்புரம் எரித்த மூர்த்தி,
கமண்டலம் தண்டம் கொண்டு உலகெலாம் வணங்க நின்றார் (8)
கீதையைச் சொன்ன கண்ணன், ஜகத்குருவாக வந்தான்
பாதையே காட்டி நம்மை நலமுற வாழ வைத்தான்
வேதத்தை வாழ வைத்தார். ஜகத்குருவாக நின்றார்
பீடத்தை அலங்கரித்து, பெரியவாளாக நின்றார் (9)
பாதையே காட்டி நம்மை நலமுற வாழ வைத்தான்
வேதத்தை வாழ வைத்தார். ஜகத்குருவாக நின்றார்
பீடத்தை அலங்கரித்து, பெரியவாளாக நின்றார் (9)
வாட்டம் வரும்போது, கோவிந்தா என்று சொன்னால்
ஓட்டமாய் வந்திடுவான். துயருடனே தீர்த்திடுவான்.
வாடி அழும்போது, 'பெரியவா' என்று சொன்னால்
ஒடி வந்திடுவார். துன்பத்தை நீக்கிடுவார். (10)
தோழன் பார்த்தனுக்காய், சாரதியாய் வந்திட்டான்.
வாழும் வழியறிய, கீதையுமே தந்திட்டான்.
உலகம் உய்ந்திடவே, சங்கரனாய் வந்திட்டார்
நலமாய் நாம் வாழ, தெய்வமாக் குரல் உரைத்தார். (11)
கார்மேகக் கண்ணனவன், பரந்தாமன், மன்னனவன்,
தேரோட்ட வந்திட்டான். பாண்டவரைக் காத்திட்டான்.
பார் போற்றும் தவமுனிவர், நாம் போற்றும் குரு நாதர்,
கால் தேய நடந்திட்டார். பாரதத்தைக் காத்திட்டார். (12)
சங்கொடு சக்கரம் ஏந்திடும் திருக்கையன்,
ஆயுதம் இன்றியே போரினை முடித்திட்டான்!
மான், மழு, சூலம் கொண்டு நின்ற முக்கண்ண§Ã¡
அமைதியும், அன்பும் கொண்டு உலகையே வென்றுவிட்டார்! (13)
No comments:
Post a Comment