
பகவத்பாதரைப் போற்றுவோம்
பகவத்பாதரைப் போற்றுவோம் - சங்கர
பகவத்பாதரைப் போற்றுவோம் (பகவத்)
இறை என்பதொன்றுதான் இரண்டில்லை என்பதைப்
பறை அறைவித்திங்கு நிலைபெறச் செய்திட்ட (பகவத்)
வேதமதம் இங்கே வீழ்ந்திட்ட வேளையில்
சோதனைபல வந்து சோர்ந்திட்ட வேளையில்
பாதகம் நீக்கி வேதமே நிலைபெற
சாதனை செய்திட்ட சிவசங்கர ஜய (பகவத்)
No comments:
Post a Comment