நாளை, சங்கர ஜயந்தி. உத்தமமான நாள். அனைவரும் கொண்டாடவேண்டிய நாள். பெரியவாளுக்கு உகந்த நாள். அந்த நாளை ஒட்டி, பகவத்பாதரின் மேல், ஒரு சிறிய பாமாலை. பகவத்பாதரைப் போற்றுவோம்
பகவத்பாதரைப் போற்றுவோம் - சங்கர
பகவத்பாதரைப் போற்றுவோம் (பகவத்)
இறை என்பதொன்றுதான் இரண்டில்லை என்பதைப்
பறை அறைவித்திங்கு நிலைபெறச் செய்திட்ட (பகவத்)
வேதமதம் இங்கே வீழ்ந்திட்ட வேளையில்
சோதனைபல வந்து சோர்ந்திட்ட வேளையில்
பாதகம் நீக்கி வேதமே நிலைபெற
சாதனை செய்திட்ட சிவசங்கர ஜய (பகவத்)