Monday, November 23, 2015

என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ?

23.11.15

நேற்றும், முந்தின தினமும் ஸ்ரீ.கணேச சர்மா மாமாவின் "தெய்வத்தின் குரல்" உபன்யாசம்  இங்கே பெங்களூரில். போக முடியாமல் அலுவலக வேலை.

"பிறர்க்கே உழைத்து ஏழையானேன்' ன்னு ஆழ்வார் பாடறது ரொம்ப சரி. போன மாசமும் போக முடியலை.

ஸ்ரத்தை இல்லைன்னுதான் தோணறது. வேற என்ன? office வேலையை ஒரு ஓரமா வைச்சுட்டுப் போக மனசு இல்லை. சத்சங்கம் அவ்வளவு முக்யமா இன்னும் ஆகலை.

நான் மனசு ஒப்பி, உடம்பு ஒப்பி, நேரம் ஒப்பி, சத்சங்கம் போய்க் கலந்துக்கறது என்னிக்கோ? பெரியவாளே மனசு கனிஞ்சு, என்கிட்ட வந்தாத்தான் உண்டு போல்ருக்கு....



என்ன சொல்லி அழைத்தால் வருவீரோ?
அடியேன் என்றனை, அடிமையாய்க் கொள்ள (என்ன சொல்லி)

சங்கரா எனவோ? பெரியவா எனவோ?
சங்கடம் தீர்த்திடும் சம்பு நீ எனவோ? (என்ன சொல்லி)

சரணம் என்றவுடன் காத்திடும் நாமமாம்
நினைத்ததும் வந்திடர் நீக்கிடும் நாமமாம்

அன்பர்கள் மனம்தன்னில் வசித்திடும் நாமமாம்
அருள்மழை தருமுந்தன் ஆயிரம் நாமத்தில், (என்ன சொல்லி)









No comments:

Post a Comment