Monday, November 16, 2015

கண்ணா, வா. வந்து எங்களைக் காப்பாற்று

எவ்வளவு மழை, வெள்ளம், துயரம்? இன்னும் மழை என்றால், சென்னையோ கடலூரோ, தாங்குமா? இந்தத் துன்பம் எப்போது விலகும்? இந்தப் பேய்மழை எப்போது நிற்கும்?

அன்று அந்த ஆயர்களுக்காகக் குன்றைக் குடையாய் ஏந்தியவனைத்தான் கூப்பிட வேண்டும்....

கண்ணா, வா. வந்து எங்களைக் காப்பாற்று.



ஆழி மழைக்கண்ணா! கார்மேக வண்ணனே!
ஊழி முதல்வன் உருவமே கொண்டாயோ?

புயல்மழை பெருவெள்ளம், எல்லாமுன் விளையாட்டோ?
அயர்ந்தலுத்தழுதிருக்கும் நாங்களுமுன் பொம்மைகளோ?

கள்ளச் சகடம் கலங்கிடச் செய்தவா,
வெள்ளக் கொடுமை நீக்கவே இங்குவா

குன்றம் அன்றேந்திக் குளிர்மழை காத்தவா,
இன்று இப் பேய்மழை துயரது களைய வா

No comments:

Post a Comment