Monday, June 27, 2016

27.06.2016 : பெரியவா மேல், ரஞ்சனியில் ஒரு பாடல்

27.06.2016

நேற்று, ரஞ்சனியில் ஏதோ ஒரு பாடல் கேட்டபோது, பெரியவா மேல், அந்த மனோ ரஞ்சனன் மேல், ரஞ்சனியில் பாட வேண்டும் என்று தோன்றியது.....



பெரியவா மேல், ரஞ்சனியில் ஒரு பாடல் :
*******************************************************************
தஞ்சமென்றுன் மலர்ப்பதம் பணிந்தேன் மனோ
ரஞ்சனனே அருள்வாய் சந்திரசேகரனே
பஞ்சமும் பிணியும் நீக்கியே அருள்வாய்
செஞ்சடாதரனே நிலவணிந்தவனே
நஞ்சுடைக் கண்டா, நாக பூஷணனே
கொஞ்சிடும் உமைதன் அகம் கொண்டவனே
மஞ்சிடைப் பனிமலை வாழ் சங்கரனே
அஞ்சுக மொழியாள் அவளானவனே
அஞ்சியே வருவோர்க் காறுதல் தருவாய்
கஞ்சிமா நகர்வாழ் சசிசேகரனே
குஞ்சித பாதமும் சிரசணிந்தவனே
கஞ்சமலர்ப்பாதம் பணிந்தேன் ஐயா!

பெரியவா சரணம்.

No comments:

Post a Comment