25.05.2017 : கிருத்திகை நன்னாள்
இன்று, கிருத்திகை
நன்னாள். இன்றைய தினத்தில், அந்த அருணகிரியார் தந்த திருப்புகழ் சந்தத்ததிலே, அந்த
ஸ்வாமிநாதனேயான நம் பெரியவாளைப் பாடும் பாக்யம் தந்ததும், பெரியவாளின் அருளாலே அல்லவா!
பெரியவாளின் தாள்
பணிந்து, அவரது பாத கமலங்களுக்கு, இப்பாடலை அர்ர்பணம் செய்கிறேன்.
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி என்ற பாடலின்,
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான என்ற சந்தம்.
உளமதி லேகி உதிரமு மாகி உயிரது
ஆளும்…இறையோனே
இளமதி சூடி கனலது
மேந்தி சபையினி லாடு மிளையோனே
கெழுதகை ஞான அறிஞரும்
தேடு மறைமுடி வானப் பெரியோனே
இருபத மேவி அடியனும்
வாழ எனதகம் தேடி.. வரவேணும்
அதியழ கான முகமது
காண அடியனுக் காசி தரவேணும்
பலமதப் பேரும்
அடிபணின் தேகும் திருவடி சேவை தருவாயே
உனைமற வாத மனமது
மீந்து மகிழ்வுடன் வாழ அருள்வாயே
வளமது கூடி மனநிறை
வாக அடியனும் வாழ அருள்வாயே
No comments:
Post a Comment