Saturday, September 30, 2017

30.9.17 : விஜயதசமி நாள் : ஏன் பள்ளி கொண்டீரயா? பொன்னய்யா

30.9.17 : விஜயதசமி நாள்

சில நாட்களுக்கும் முன்னால், “ஏன் பள்ளி கொண்டீரய்யா” என்ற அருணாசலக் கவிராயரின் பாடல் கேட்டேன். 

NC வசந்தகோகிலம் அவர்களின் அழகிய குரலிலே, இந்தப் பாடலைக் கேட்ட யார்தான் மயங்காமல் இருக்க முடியும்? (இந்தப் பாடலைப் பாடாத வித்வான்களே இல்லை!!) 

பாடல் கேட்கும்போதே, சயனித்துக் கொண்டிருக்கும் இந்த photo பெரியவாளையும் நினைத்துக் கொண்டேன்.

அத்தோடு, இந்தப் பாடலைப் பற்றி, வரி வரியாக - வார்த்தை வார்த்தையாக explain பண்ணி, பெரியவா சொன்ன அர்த்தமும் (பார்க்க : http://www.kamakoti.org/tamil/7dk200o.htm) நினைவுக்கு வந்தது.

அந்த அரங்கன் பள்ளி கொண்டாற்போல, பெரியவா பள்ளி கொண்டதற்கும் ஏதும் காரணம் இருக்குமோ? என்ன காரணம் இருக்கும்? அடியேன் மனதில் எழுந்த இந்த சிந்தனையில் விளைந்த காரணங்களை “ஏன் பள்ளி கொண்டீரய்யா” மெட்டிலேயே முடிந்தவரை புனைய முற்பட்டேன்…

அருமையான இந்தப் பாடலை என் இஷ்டத்திற்குக் கையாண்டதற்காக அருணாசலக் கவிராயர் என்னை மன்னித்தருள வேண்டும். இப்படியெல்லாம் என் இஷ்டத்திற்குத் தன்னைப் பாடுபொருளாக்கிப் படுத்தியதற்காக, பெரியவாளும் அடியேனை மன்னிக்க வேண்டும்!

பெரியவா சரணம்.
******************************************************************************************





ஏன் பள்ளி கொண்டீரயா? பொன்னய்யா…
ஏன் பள்ளி கொண்டீரய்யா? (ப)

ஓரிருக்கை எனும் அழகிய தலத்திலே
அழகொளிர்ந்திடும் பாலாற்றங்கரையிலே (அப)

பந்தபாசம் அறுத்ததற்கோ?
தாய் தந்தை சொந்தம் விடுத்ததற்கோ?
காவி பூண்டு நின்றதற்கோ?
குருநாதன் தன்னை இழந்ததற்கோ?
 
வேதபாடமெலாம் முற்றும் கற்றுணர சற்றுழைத்த இளைப்போ?
வேதபாடமதைச் சொன்னவர்க்குப் பொருள் சொல்லிநின்ற இளைப்போ?
காடுமேடெலாம் நடந்து பாரதம் சுற்றி வந்த இளைப்போ?
காசினிமேல் நம் சாத்திரங்களை நிலை நிறுத்தும் இளைப்போ?
விரதக் களைப்போ? பூஜை நித்தம் செய்து வந்த இளைப்போ?
மடத்தை நடத்தி அலுத்தோ? உடலை வருத்திக் களைத்தோ?
நிதமும் நன்மை என்னவென சொல்லி அலுத்ததோ?
மௌனநாடகமும் பண்ணி அலுத்ததோ? (ச)

காஞ்சியிலே வரும் களையோ? சிதைந்த எம்
பண்பைத் திருத்தும் பெரும் களையோ?
வாஞ்சையால் வரும் களையோ? எம்மைக்
காக்கவந்த பெரும் களையோ?
காபி அரக்கனையும் பட்டுபகட்டினையும் ஓட்டி அலுத்தீரோ?
பசுக்கள், வேதியர்கள் பக்தர் கூட்டம்தனைப் காத்து அலுத்தீரோ?
துதிசெய் அடியவரைக் காக்கவேண்டி விழி பூத்து அலுத்தீரோ?
கலிசெய் கொடுமைதனை மாற்றி நன்மையெலாம் சேர்த்து அலுத்தீரோ?
மரபைக் காத்தோ? தருமநெறி ஒன்றே பார்த்தோ?
பவவினைகள் தீர்த்தோ? தெய்வக் குரலை வார்த்தோ?
அடியவருக்காய் ஜகத்குருவாய் நெறி சொல்லி அலுத்ததோ?
நித்தநித்தம் தவம் செய்து அலுத்ததோ?  (ச)

No comments:

Post a Comment