26.06.2018 :
அனுஷ நன்னாள்
இன்றைய அனுஷ
நன்னாளிலே, பெரியவாளை, “விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே” என்று தொடங்கும்
தோடகாஷ்டகத்தின் அந்த சந்தத்திலே பாடவேண்டும் என்று தோன்றியது.
பக்தி மயமா,
பகவத் பாதாளைப் பாடின அந்தத் தோடகாச்சார்யாளோட பக்தி, வினயத்தில் கோடியில் ஒரே ஒரு
துளியாவது அடியேனுக்கும் வரட்டும்.
உனை நான் நிதமும் தொழுதே பணியும்
ஒருமா வரமே தருவாய், வருவாய்!
வினையா வையுமே பொடியாக்கிடுவாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (1)
அறுமா பகைவர் குடியேறியழி
உளமீதினிலே குருவே வருவாய்
உறுபா வியிவன் பொறுத்தே அருள்வாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (2)
உனையோர்க் கணமும் நினையா மனமா
கியசேற்றினிலே பதபங்கயமா
இணையே தருவாய் இனிதே வருவாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (3)
திருவின் மகனே! பெருமாமலைதன்
மகளின் மகனே! குருபுங்கவனே
ஒரு சீருமிலேன் பதமே அருள்வாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (4)
குறையேது மிலா தவமா மலையே
விலையேதுமிலா அருள்மா மழையே!
நிறையேதுமிலா எனையும் தடுத்தாள்
குருசங்கர தேசிகனே சரணம்! (5)
பிறைசூடியசன் திரசேகரனே!
விதி நாடிபணி சுடர்க்கோமகனே!
இறையாமுனையே கதியாயடைந்தேன்
குருசங்கர தேசிகனே சரணம்! (6)
மதியேதுமிலேன் கதியேதுமிலேன்
சிறையாமுடலே சுகமென்றுழல்வேன்
துதிசெய்துனது கழலே பணிந்தேன்
குருசங்கர தேசிகனே சரணம்! (7)
மறை நாயகனே சரணம் சரணம்
மலைமா மருகா சரணம் சரணம்
கறைக் கண்ட நடேசா! சரணம்!
குருசங்கர தேசிகனே சரணம்! (8)
No comments:
Post a Comment