Friday, January 1, 2016

புத்தாண்டு 01.01.2016 அன்று, திரு. ஜபல்பூர் நாகராஜ சர்மா அவர்களை சந்தித்தது

நேற்று, ஆங்கில வருஷம் முதல் நாள். New year beginning. திரு. ஜபல்பூர் நாகராஜ சர்மா அவர்கள் பெங்களுரில் இருப்பதைக் கேள்விப்பட்டு, குடும்ப சகிதமாக, சென்று பார்த்து. நமஸ்கரித்துவிட்டு வந்தோம்.


ஜபல்பூர் மாமாவிற்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை. ஜபல்பூரை விட்டுவிட்டு இப்போது சென்னை / பெங்களுர் என்று வந்துவிட்டாலும், அவர் எல்லாருக்கும் ஜபல்பூர் மாமாதான்!

ஆனந்த விகடன், கலைமகள், சக்தி விகடன், குமுதம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் மாமாவின் கட்டுரைகளைப் படிக்காத ஆன்மீகப் பெருமக்கள் மிகச் சிலரே இருப்பர்.


ஆதி சங்கரர், தனது குருவான கோவிந்த பகவத் பாதரை, நர்மதா நதி தீரத்தில் சென்று சந்தித்து குருமுகமாகத் துறவறம் பெற்ற ஒரு குகையை ஏழு ஆண்டுகள் தேடி,  நமது காருண்ய மூர்த்தியான பெரியவாளின் க்ருபையாலும், வழிகாட்டுதலாலும் கண்டுபிடித்தவர் மாமா.

பெரியவாளைப் பற்றி, தனது புத்தகங்களைப் பற்றி, இந்த 90ஆம் வயதிலும் தனது எழுத்துப் பணி தொடர்வது பற்றி, மாமா பேசிக் கொண்டு இருந்தார்.

இன்றும், Ulsoorல், ஒரு வர்மக் கலை மருத்துவ முகாமுக்குச் சென்ற இடத்தில் மாமாவைப் பார்த்ததும், பெரிய சந்தோஷம்தான்.

மாமாவை சந்தித்துப் பேசியது குறித்து, அருமை நண்பர், கார்த்தி அண்ணா, "கவிதையாய் எழுதுங்களேன்" என்றார்.

மாமா, அந்தக் குஹையைக் கண்டுபிடித்த நிகழ்ச்சியை,  மனதிலே நினைத்துப் பார்த்ததில் பிறந்த சில கவிதை வரிகளை, இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


சக்தியவள் ஐம்பத்து ஒருபீடம் நின்று
முக்தியருள் தலமெல்லாம் நாமறியவென்று
பக்தியுடன் சொன்ன ஜபல்பூரின் திருவாளர்
யுக்தியுடை நாகராஜ சர்மா அவரன்று

விரித்தசடை தரித்தமதி குளிர்ப்புனலுமின்றி
சிரித்தமுக சம்புவுமே குரு அவரைத் தேடி
விரித்ததிர ஓடிவரும் நருமதையின் தீரம்
திரிந்துகுரு கோவிந்த பகவதரை நாடி

முறையாக சன்யாஸ தீக்‌ஷையுமே பெற்று
இறையாக, குருவாக, சங்கரரும் ஆன
துறையான குகைகாண அருளதையும் வேண்டி
நிறையான உருவாய்நம் குறைதீர்க்க வந்த


தனக்குவமை இல்லாத தெய்வமதைக் கேட்க, 
மனக்குகையில் அமர்ந்தருளும் ஈசனுமே சொன்ன
வனத்தும், நதியடுத்தும், ஏழாண்டுகளாய் தேடி
கனத்த இருள் குவித்தபெரும் குகையையுமே கண்டார்!






No comments:

Post a Comment