Thursday, April 30, 2015

Periyava : Chidambaram Kumbabishekam : Paamalai on Nataraja

நாளை, 01-05-2015, வெள்ளிக்கிழமை அன்று, சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா. கடைசியாக, 1987 ஆம் வருஷம்தான் கும்பாபிஷேகம் நடந்தது. 28 வருஷங்களுக்கு அப்புறம், இப்போது நடக்க இருக்கிறது.



ஆனந்தமே வடிவான அந்தக் கூத்தனின் கும்பாபிஷேகப் பெருவிழாவினை நேரிலே காண்பவர்கள், கொடுத்து வைத்தவர்கள்தான்!

சகல தத்வங்களும் நிறைந்த வடிவான அந்த ஆனந்த நடராஜ மூர்த்தியை, ஒரு தத்துவமும் அறியாத நானும் துதிக்க அனுக்ரஹம் அளித்த அந்தப் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு நமஸ்காரங்கள்.

அந்தத் தில்லை நடராஜ மூர்த்தி மேலே சிறியவன், அடியேனின் அர்ப்பணமாக, ஒரு பாமாலை :




("ஆடுகின்றானடி தில்லையிலே" மெட்டு)

ஆனந்தக் கூத்தாடும் நடராஜனே
சச்சிதானந்தக் கூத்தாடும் நடராஜனே
மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன்
என்மன- கூத்தடங்கிட ஒரு வழிசொல்லிடேன் - நீ (ஆனந்த)

நீராட நெருப்பாட தானாடினாய்
சடையாட இடையாட ஜதியடினாய் (ஆனந்த)

குழலாட புனலாட நடமாடினாய்
பெண்ணாட அதை விஞ்சி குழை சூடினாய் (ஆனந்த)

இரவாட பகலாட சதிராடினாய்
பிறையாட மறையாட இறையாடினாய் (ஆனந்த)

மானாட மழுவாட கோனாடினாய்
விண்ணாட மண்ணாட விளையாடினாய் (ஆனந்த)

உலகென்னும் மேடையில் நீயாடினாய்
உயிர்களை ஆட்டியே கூத்தாடினாய் (ஆனந்த)

நீயாட உலகங்கள் தானாடுமே!
உலகாளும் அரசாட, மனமாடுமே (ஆனந்த)

முயலகன் மீதாடும் நடராஜனே!
மயங்குமென் மனம்மீதும் ஆடாய் நீயே (ஆனந்த)

Wednesday, April 29, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram (8) : Mahayogi vinirbedhya mahathvaya Namo Nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


"மஹாயோகி வினிர்பேத்ய மஹத்வாய நமோ நம:" (8)

"மஹாயோகிகளால் குடைந்து தேடப்படும் பெருமையுள்ளவருக்கு நமஸ்காரம்" (8)

"Obeisance to Him who has the essence of the greatness sought after by the great yogis" (8)


காற்றேதானுண்டு கடுந்தவமே செய்தாரும்
பற்றே அறுத்திங்கு பெருமுனிவரானாரும்
குற்றேவல் செய்திடவே தேடிடும் அப்பொற்பாதன்
கூற்றே பணியுமந்தப் பரமன்தாள் போற்றி
போற்றி (8)

Tuesday, April 28, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram (7) : Mahadevendra hastabja sangyathaya Namo nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


"மஹாதேவேந்த்ர ஹஸ்தாப்ஜ சஞ்ஞாதாய நமோ நம:" (7)

"ஸ்ரீ மாஹதேவேந்த்ர சரஸ்வதி சங்கராசார்யளின் ஹஸ்த கமலங்களில் தோன்றியவருக்கு நமஸ்காரம்" (7)

"Obeisance to Him who was ordained by the lotus like hands of Sri Mahadevendra Saraswati Sankaracharyal" (7)

பச்சிளம் பாலகன் பூமுகம் கண்டன்று

மெச்சி மஹேந்த்ர சரஸ்வதிப் பெரியாரும்
இச்சகம் புகழ் குருவாக வாழ்த்திட்ட
அச்சிவம் அதுவான முனிவன்தாள் போற்றி போற்றி (7)

Periyava : Uzith thandavam

4500+ people dead in Nepal. There is no answer to the inevitable "Why". The "rational" people are talking about Nepal's houses and population and why it is important to have proper structure in place. That is important. Yes. But, why is such devastation happening in some ways? It could be earthquake, it could be a Tsunami, it could be a war, a terrorist attack...


To my mind, there is no other refuge than His feet. He creates. He wreaks havoc. Only He can save too...

உலகம் யாவையும் தாமுளவாக்கலும், 
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, 
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர், 
அன்னவர்க்கே சரண் நாங்களே -

கம்ப ராமாயணம்

A small kirthanai to the Dancing God who has wreaked havoc. Only He can also save us...


Raagam : Shanmugapriya

தாண்டவ மூர்த்தியே - கோர ஊழித் 
தாண்டவம் நிறுத்தியே நலமருள்வாயே

எத்தனை அழிவு, எத்தனை துயரம்
அத்தனையும் கண்டோம், அருள் தருவாயே

வேதம் மறந்த வாழ்க்கையால் கோபமோ
நாதனை நினையா நடத்தையால் கோபமோ
பாதகமேசெய் மூடரால் கோபமோ
பாதத்தைப் பற்றிடா மடமையால் கோபமோ

தெய்வம் தொழாத தன்மையால் கோபமோ
பொய்யே புகன்றிடும் மாந்தரால் கோபமோ
மெய்யெதென்றறியாயெம் மயக்கத்தால் கோபமோ
உய்வழி விட்டே சென்றதால் கோபமோ

மங்கையர் நாணத்தை மறந்ததால் கோபமோ
மங்கல நாமத்தை மறந்ததால் கோபமோ
இங்கு உன்னடியாரை மறந்ததால் கோபமோ
இங்கெமதின்னுயிர்க் கொண்டிடும் கோபமோ


Monday, April 27, 2015

Periyava : Poem : "Marai thedum malarppatham"

மறைதேடும்மலர்ப்பாதம் 




மறை தேடும் மலர்ப்பாதம்

குறை நீக்கும் திருநாமம்

இறையே நீ எனச்சொல்லி,

பறைசாற்றும் சுடர் தேகம்



கரை அற்ற புனல் ஒன்றை

பிறையோடு அணிசூடும்

நிறை கொண்ட சிவன்ரூபம்

தரைவந்த நம்யோகம்!



பெருவாழ்வு தரும் ஹஸ்தம்

அரும் தவமே திருக்கோலம்

குறுநகையில் மனம் அழியும்

உறு வினையும் அழுதழியும்




ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

Periyavaa Kirthanai : "Nerile Unaikkaana Aval Migunthathaiyya" Raagam : Madhuvanthi



ராகம் : மதுவந்தி

நேரிலேஉனைக்காண, ஆவல்மிகுந்ததைய்யா
உன்மலர்தாள்பணிய, மனமும்துடிக்குதைய்யா (பல்லவி)

உன்னருகிலேஇருந்து, உன்சேவைசெய்துகொண்டு
உன்முகம்காண்பதற்குவரம்ஒன்றுதருவாய்ஐயா ! (அனுபல்லவி)

பெரியவாஉன்னைக்காணவேஏங்குகின்றேன்
பெரியவாஉனைநினைந்துநாளெலாம்உருகுகின்றேன்
கருணைக்கடல்நீஎன்பார் - தீனனைக்கண்பார்ஐயா!
நேரிலேகாட்சிதந்துஎன்னையுன்  அடிசேர்ஐயா! (சரணம்)

ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர!

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram : 6 : Sanakaathi Mahayogi sathrusaya Namo Nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication 
“Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra 
Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஸனகாதி மஹா யோகி சத்ருஸாய நமோ நம:" (6)

"ஸனகர் முதலிய மஹாயோகிகளுக்கு சமமானவருக்கு நமஸ்காரம்" (6)
"Obeisance to Him, an equal to the great yogis like Sanaka and others" (6)



ஸனக சனாதன யோகிகள் போலிங்கு
மனதை அழித்து ஆத்மனாய் நின்றானை
'
தனது', 'தான்' விட்டு யாதுமை நின்றானை
தினமும் தொழுது ஏற்றியே போற்றுவோம் (6)



Sunday, April 26, 2015

Periyava : Ashtoththara Namavali Stotram : 5 : Ashtanga Yoganishta karishtaya namo nama

பெரியவா அஷ்டோத்தர நாமாவளி ஸ்தோத்ரம்

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"அஷ்டாங்க யோகனிஷ்ட கரிஷ்டாய நமோ நம:" (5)

"அஷ்டாங்க யோக நிஷ்டையில் சிறந்தவருக்கு நமஸ்காரம்" (5)

"Obeisance to the well versed One in the austerities of ashtanga yoga" (5)

"எட்டெட்டுக் கலைகளும் கல்லாமல் கற்றானை
அட்டாங்க யோகமும் முற்றுமே உணர்ந்தானை
அட்டமா சித்தியும் கொண்டிங்கு மறைத்தானை
நிட்டையில் கொண்டிங்கு வணங்கியே போற்றுவோம்" (5)

Periyava : Does the Guru think of the sishya?

Does the Guru think of the sishya?

Sometimes, in my utter ignorance, I wonder, "I keep thinking of Periyava. Does Periyava think of me? There are lakhs of, crores of, billions of devotees for Him. Does he have the time to think of me?"
The mind knows that the Sarveshwara takes care of everyone and everything. However, the heart sometimes craves for some sign from the Dad and Mom that He is that He really is looking after us...
While I was thinking like this, a few articles and incidents came to my mind, which I thought were worth sharing here...
1. Dr. Sundararaman - the learned professor from Colombia :
whose interview is available in Sage of Kanchi site and who has written the book called " I lived with GOD". While the book itself is about the learned doctor's experiences and how Periyava took care of him in every single step of his life, at one place, Dr.Sundararaman says : "Periyava was talking to a group of devotees. He asked them, "I am now thinking of someone. But, that someone is not here. He has flown off to the US. That is Sundar". While saying this, one can almost see him weeping in gratitude. The God, thinking of mere mortals and talking about it to others...
2. Sri.Sri. Muralidhara Swamiji's recollection of Periyava:
Guruji talks about Periyava in almost every single upanyasam of His. There is one incident : Guruji was going for Periyava's darshan. While going in, he met a few telugu devotees, who asked him a few questions in telugu. Not knowing telugu, as He could guess the questions, He still managed to answer in English. As he went in to have darshan, there was a question in his mind : "we keep thinking of Periyava. Does Periyava keep thinking of us"?
He prostrated in front of Periyava. Periyava asked him : "As you came in, did you meet a few telugu people?" Guruji said "yes". Periyava continued : "Even though you did not know telugu, you could understand what they are asking". Guruji said "yes". Periyava continued : "But, as you did not know telugu, you answered in English, is it"? ("தெலுங்கு தெரியலைங்கறதால, Englishல பதில் சொன்னியாக்கும்!")
Guruji says : Very clearly, Periyava showed to me that He indeed keeps thinking about all His devotees...


3. Ramana Maharishi and "Mor Kuzambu"
This is an incident I came across in the stories about Maharishi. One of his very close devotees was living a little away from the Ramanashramam. One day, there was "Mor Kuzambu" prepared in the Ashram during the meal time.
Ramana Maharishi, while eating, asked one of the attendants to take a little of the mor kuzambu and go give it to the devotee. Ramana Maharishi said " he loves Mor Kuzambu ("அவனுக்கு, மொர் குழம்புன்னா ரொம்பப் பிடிக்கும்!")
The attendant went to the devotee's place and gave the Mor Kuzambu. The puzzled devotee asked why is this being given to him. When the attendant explained that Maharishi personally asked it to be given it to him, the devotee felt ecstatic. He took the Mor Kuzambu jar, put it on his head and started dancing "my gurunathar thought of me", "My gurunathar remembered me", "My gurunathar has sent this to me"...
I am sure there would be thousands of examples which illustrate how very much the Guru thinks of His sishyas and How our Periyava keeps thinking about all of us and How He takes care of all of us.
Still, the ignorance is there. The longing is there. While the head understands the Periyava is there everywhere, the heart still wants to see Him right in front...to ask Him, "Ummachi thatha, ninga engalai ninaichipelo?" ("உம்மாசித் தாத்தா, நீங்க எங்களை நினைச்சுப்பேளோ?") We write whatever we feel about you...do you read them? Do you like them? ("மனசுல பட்டதையெல்லாம் எழுதறோம். நீங்க அதையெல்லாம் படிப்பேளோ? உங்களுக்குப் பிடிக்குமோ?")
It is obvious that we do what we do because He has ordained it. Things happen because He has willed it. But, the childish ignorance to ask Him also looks OK..whom else can we ask? Whom else can we be so very free with? Whom else can we go to?
Periyava Charanam.

Saturday, April 25, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namaavali : 4 : Sarvangyacharya bagavath swarupaya Namo nama

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம் : 4

The Nammavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்


"ஸர்வங்க்யாசார்ய பகவத் ஸ்வரூபாய நமோ நம:" (4)


"ஸர்வங்க்ய ஆசார்ய ஸ்வரூபமானவருக்கு நமஸ்காரம்" (4)

"Obeisance to the Acharya - the form of all knowing Bhagavan" (4)




விடையேறும் உமைபங்கன் தரைவந்து வாழ்வுக்கு
விடைதந்து, காஞ்சிமா நகர்ப் பீடம்
உடனேறி, "சர்வங்க்யன்" எனப் போந்து
உடனெங்கள் குருவாக வந்திட்டான் போற்றி போற்றி (4)