4500+ people dead in Nepal.
There is no answer to the inevitable "Why". The "rational"
people are talking about Nepal's houses and population and why it is important
to have proper structure in place. That is important. Yes. But, why is such
devastation happening in some ways? It could be earthquake, it could be a
Tsunami, it could be a war, a terrorist attack...
To my mind, there is no other refuge than His feet. He creates.
He wreaks havoc. Only He can save too...
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்,
அன்னவர்க்கே சரண் நாங்களே -
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்,
அன்னவர்க்கே சரண் நாங்களே -
கம்ப ராமாயணம்
A small kirthanai to the
Dancing God who has wreaked havoc. Only He can also save us...
Raagam : Shanmugapriya
தாண்டவ மூர்த்தியே - கோர ஊழித்
தாண்டவம் நிறுத்தியே நலமருள்வாயே
எத்தனை அழிவு, எத்தனை துயரம்
அத்தனையும் கண்டோம், அருள் தருவாயே
அத்தனையும் கண்டோம், அருள் தருவாயே
வேதம் மறந்த வாழ்க்கையால் கோபமோ
நாதனை நினையா நடத்தையால் கோபமோ
பாதகமேசெய் மூடரால் கோபமோ
நாதனை நினையா நடத்தையால் கோபமோ
பாதகமேசெய் மூடரால் கோபமோ
பாதத்தைப் பற்றிடா மடமையால் கோபமோ
தெய்வம் தொழாத தன்மையால் கோபமோ
பொய்யே புகன்றிடும் மாந்தரால் கோபமோ
மெய்யெதென்றறியாயெம் மயக்கத்தால் கோபமோ
பொய்யே புகன்றிடும் மாந்தரால் கோபமோ
மெய்யெதென்றறியாயெம் மயக்கத்தால் கோபமோ
உய்வழி விட்டே சென்றதால் கோபமோ
மங்கையர் நாணத்தை மறந்ததால் கோபமோ
மங்கல நாமத்தை மறந்ததால் கோபமோ
இங்கு உன்னடியாரை மறந்ததால் கோபமோ
இங்கெமதின்னுயிர்க் கொண்டிடும் கோபமோ
மங்கல நாமத்தை மறந்ததால் கோபமோ
இங்கு உன்னடியாரை மறந்ததால் கோபமோ
இங்கெமதின்னுயிர்க் கொண்டிடும் கோபமோ
No comments:
Post a Comment