Sunday, May 31, 2015

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 39

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பக்த மானச ராஜீவ பவனாய நமோ நமஹ:" (39)

"பக்தர்களின் மனக் கமலங்களை இருப்பிடமாகக் கொண்டவருக்கு நமஸ்காரம்" (39)

"Obeisance to Him who alone resides in the lotus minds of the devotees" (39)

சுகம்தான் அளிக்கும் எந்தன் மனம்தான் அழிக்குமந்த
முகத் தாமரையும் திருப்பதத் தாமரையும் பக்தர்
அகத் தாமரையதனில் அருள்பொலிந்தமர்ந்திருக்கும்
ஜகத் காரண மூர்த்தி அவர்தன்னைப் போற்றி நிற்போம் (39)

Periyava : Ashtothara Sadha Namavali : 40

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பக்தலோசன ராஜீவ பாஸ்கராய நமோ நமஹ:" (40)

"பக்தர்களின் கண்களாகிய தாமரை மீது ப்ரகாசிக்கும் சூரியனாக விளங்குபவருக்கு நமஸ்காரம்" (40)

"Obeisance to Him who is the shining Sun that opens up the lotus eyes of his devotees" (40)

 சூரியனாய் நீ இருக்க, சுடர் முகமோ ஒளி பெருக்க
 காரிருளெலாம் அகல, பங்கயக் கண் மலர்ந்து பக்தர்
 சீரியசெவ்வடி பெருக்கும் கருணைக் கடல் மூழ்கி நிற்க
 சேரிடமிதெனத் தெளிந்து நாமும் சரணடைந்தோம் போற்றி போற்றி (40)

Saturday, May 30, 2015

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 27

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"மஸ்தகோல்லாசி ருட்ராக்ஷ மகுடாய நமோ நம" (27)

"தம் சிரத்தின்மீது விளங்கும் ருட்ராக்ஷமுடையவருக்கு நமஸ்காரம்" (27)

"Obeisance to Him who sports a crown of rudrakshas around his head" (27)

ருத்ராக்ஷமணி மகுடம் அணிந்திடும் சிரசும்
ருத்ராக்ஷமணி மாலை அணிந்திடும் கழுத்தும்
ருத்ராக்ஷமணி அடியார் சூடும்பொற் பாதமுமாய்
ருத்ரனாய், சிவன்தானை நின்றானைப் போற்றிடுவோம் (27)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 28

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஸாக்ஷாத் பரசிவாமோக தர்ஷனாய நமோ நம" (28)

"வீணாகாத பரசிவ தரிசனத்தை கண்ணெதிரேயே கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (28)

"Obeisance to Him who gives, directly to your eyes, an unfailing vision of Parasiva" (28)

பரமானந்த சதாசிவ வடிவென வந்தானை
பரசிவ தரிசனம் கண்ணெதிரேயிங்கு தந்தானை
பரவாசுதேவனும் ப்ரம்மனுமாய் இங்கு நின்றானை
பரம்பொருள் என்றே கண்டிங்கு நாமும் போற்றிடுவோம் (28)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 29

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஸக்ஷுர்கத மஹா தேஜோ உஜ்ஜ்வலாய நமோ நம:"(29)

"நம் கண்ணெதிரேயே அதி உஜ்ஜ்வலமான மஹா தேஜசாக விளங்குபவருக்கு நமஸ்காரம்" (29)

"Obeisance to Him who shines before our very eyes as a shining ball of tejas "(29)

தேசெலாம் சேர்ந்தோர் வடிவாய் வந்தமர்ந்த பெரும்
தேசுடையானை, மறையாத மின்னலாய் கண்ணெதிரே வந்த தென்
தேசமுடையானை, என்னாட்டவர்க்கும் இறைவனை
தேசமும் காலமும் கடந்தானை வணங்கினோம் போற்றி போற்றி (29)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 30

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ஸாக்ஷாத்க்ருத ஜகன் மாத்ரு ஸ்வரூபாய நமோ நமஹ":(30)

"ஜகன்மாத்ரு ஸ்வரூபத்தை நேரில் கண்டவருக்கு நமஸ்காரம்" (30)

"Obeisance to Him who has directly seen the form of the Mother of the universe" (30)

உலகெலாமீன்ற தாயை, காமாக்ஷி அன்னையை, ஓர்கணமும்
விலகாமல் அருகிருந்து நித்தம் கண்டுருகும்
நலம்கொண்ட சங்கரனாய் வந்துதித்த எம்குருவை
வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே போற்றிடுவோம் (30)

Periyava : Periyava Ashtothara Namavali : 31

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"க்வசின் பால ஜனாத்யந்த சுலபாய நமோ நமஹ:" (31)

"சிலசமயம், சிறுவர்களுக்குக் கூட சுலபமாகப் புரியக் கூடியவருக்கு நமஸ்காரம்" (31)

"Obeisance to Him, who sometimes, is easily accessible even to children" (31)

குழந்தைகளுகென்றென்றும் உம்மாச்சித் தாத்தாவாய்
குழந்தைமனம் கொண்டோர்க்கு உடனருள்செய் நற்குருவாய்
பழகுதற்கெளியோனாய் வந்திடுமத் தேவின்
கழலிணையடி துதித்து வணங்கிடுவோம் போற்றி போற்றி (31)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 32

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"க்வசின் மஹா ஜனாதீவ துஷ்ப்ரபாய நமோ நமஹ : "(32)

"சிலசமயம் பெரியவர்களுக்கும்கூட சுலபமாகப் புரிய முடியாதவருக்கு நமஸ்காரம்" (32)

"Obeisance to him who sometimes is not easy to comprehend even for grown ups."(32)

தான் எளியனாகி சிறு பாலருக்கும் அருள் வத்ஸன்
'நான் பெரியன்', 'நான் அறிவேன்' என்றுவரும் பெரியோர்க்கோ
தனை அறிய முடியாமல் மறைத்துவிடும் பெருமாயன்
தனை எண்ண வினை அழியும் பதம் பற்றிப் போற்றிடுவோம் (32)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 33

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"கோப்ராஹ்மண ஹிதாஸக்த மானசாய நமோ நமஹ:" (33)

"பசுக்கள், ப்ரஹ்ம நிஷ்டர்கள் இவர்களின் நலனில் ஈடுபடுபவருக்கு நமஸ்காரம்" (33)

"Obeisance to Him who is involved in serving cows and the followers of the Brahman"

பசுபதி ரூபனும் ஆனிறை மேய்த்து அன்று
பசுக்களைக் காத்தானும் ஓருருவில் வந்திங்கு
பசுக்களைக் காத்து வேதத்தைக் காக்கும்வேத
சிசுவையும் காத்து நின்றார் பொற்பதம் போற்றி போற்றி (33)

Periyava : Periyava Ashtothara Sadha namavali : 34

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"குருமண்டல சம்பவ்ய விதெஹய நமோ நமஹ:" (34)

"பெரியோர்களால் பாரட்டப்பட்ட துறவிக்கு நமஸ்காரம் "(34)

"Obeisance to the renunciate honored by great elders" (34)

ஆதிகுரு வாழ்த்தும், சுப்ரமண்ய பரம்
ஜோதிகுரு வாழ்த்தும், ஜகத்குரு க்ருஷ்ண கீதை
ஓதிகுரு வாழ்த்தும் ஆசை அழித்த அந்த
போதிகுரு வாழ்த்தும் முனிவன்தாள் போற்றி போற்றி

Priyava : Periyava Ashtothara Sadha Namavali : 35

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பாவனா மாத்ர சந்துஷ்ட ஹ்ருதயாய நமோ நமஹ:" (35)

"தன் ஆத்ம நிலை உணர்ந்த மாத்ரமே சந்தோஷமடைபவருக்கு நமஸ்காரம்" (35)

"Obeisance to Him who is pleased just by the contemplation of His self" (35)

அருச்சனை வேண்டாம் ஒரு ஆராதனை செய்ய வேண்டாம்
அறுசுவை உண்டி செய்து நைவேத்யம் பண்ண வேண்டாம்
பெரும்தவம் ஏதும் வேண்டாம் மனதிலோர் கணம் நினைத்து
உருகினால் மகிழ்வான் ஐயன் மலரடி போற்றி போற்றி (35)

Periyava: Periyava Ashtothara Sadha namavali : 36

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பவ்யாதி பவ்ய திவ்ய ஸ்ரீ பதாப்ஜாய நமோ நமஹ :" (36)

"மிக மிக மங்களமான திவ்யமான ஸ்ரீ பாத கமலங்களுடையவருக்கு நமஸ்காரம்" (36)

"Obeisance to Him whose feet are more blissful and divine" (36)

பாரதம் நடந்த பாதம் தேவரும் வணங்கும் பாதம்
தாரக நாமம் போல நினைத்ததும் காக்கும் பாதம்
காரணம் ஏதுமின்றி கருணையே காட்டும் பாதம்
பாரது போற்றும் பாதம் வணங்கினோம் போற்றி போற்றி (36)

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 37

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"வ்யக்தாவ்யக்தரானேக சித்கலாய நமோ நமஹ:" (37)

"ஸ்பஷ்டமானதையும் அஸ்பஷ்டமனதையும் காட்டும் பேருணர்வு உடையவருக்கு நமஸ்காரம்" (37)

"Obeisance to Him whose waves of consciousness, cit kala, explain the obvious and the non obvious" (37)

தெரிந்தவோர் விஷயம் சொல்வார், தெரியாத பொருளும் சொல்வார்
அறிந்தவோர் முறையும் சொல்வார், அறியாத மறையும் சொல்வார்
புரியாத 'இறை'யை இங்கே, புரியுமாறு வாழ்ந்து காட்டி
விரிவாக விளக்கம் தந்த சித் கலா ஸ்வரூபன் தாள் போற்றி போற்றி (37)

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 38

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ரக்த சுக்ல பிரபாமிச்ர பாதுகாய நமோ நமஹ" (38)

"சிவப்பு வர்ணமும் சுத்த வெள்ளை வர்ணமும் கூடி, சோபிக்கும் பாதங்கள் உடையவருக்கு நமஸ்காரம்." (38)

"Obeisance to Him whose feet shine with redness and pure whiteness" (38)

செக்கச் சிவந்த பாதம், வெண்மதியொளி வீசும் பாதம்
திக்குகள் போற்றும் பாதம், தீனரைக் காக்கும் பாதம்
பக்குவம் ஊட்டி இங்குப் பாதையைக் காட்டும் பாதம்
விக்கினம் நீக்கும் பாதம் சரணென்று அடைந்தோம் நாமே (38)

Sunday, May 17, 2015

Periyava : Astothara Sadha Namavali : 26

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"சம்சராம்புதி நிர்மக்ன தாரகாய நமோ நம:" (26)

"
சம்சாரக் கடலில் விழுந்து தவிப்பவர்களை அதிலிருந்து கடத்தி விடுபவருக்கு நமஸ்காரம்"
(26)

"
Obeisance to Him who gets those sinking in the ocean of samsara to cross that ocean" (26)

பாழ்மனம் கொண்டுசெல்லும் வழியெலாம் சென்று இந்த
வாழ்க்கையாம் கடலில்வீழ்ந்து வகை தெரியாமலிங்கே
மூழ்கிடும் பக்தர்தம்மை காத்திடும் படகாய்வந்து
ஊழ்வினை மாற்றிவைக்கும் சங்கரன்தாள் போற்றி போற்றி (26)

Saturday, May 16, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 25

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"சங்கீதானந்த சந்தோஹ சர்வஸ்வாய நமோ நம:" (25)

"சங்கீதத்தின் ஆனந்தப் பெருக்கென்னும் பெரும் தனம் உடையவருக்கு நமஸ்காரம்" (25)

"Obeisance to Him possessing the wealth of the flood of the joy of music" (25)

பல்லிசை வல்லாரும் ஏத்தும் அக்கோவலனை
சொல்லிசையாய் இனிக்க அருளுரைசெய் பெம்மானை
தொல்லிசை சாமம் பயில் ஆனந்த சாகரனை
நல்லிசையால் பாடி வணங்கினோம் போற்றி போற்றி (25)

Friday, May 15, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavavali : 24

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"தப: ப்ரபாவிராஜத் சன்னேத்ராய நமோ நம" (24)

"தபோபலத்தின் ப்ரபாவத்தால் எப்போதும் ப்ரகாசிக்கும் அழகிய நயனமுடையவருக்கு நமஸ்காரம்" (24)

"Obeisance to Him whose beautiful eyes constantly shine with the power of his tapas" (24)

"நித்தம் நீடுதவம் செய்து நயனங்கள்
சுத்த சிவஞானம் தந்தருளி மிளிர்ந்திடுமப்
பித்தன் பானுமதி நயனமாய்த் தாமுடைய
வித்தகன் வாழ்த்திடும் குருவின்தாள் போற்றி போற்றி" (24)

Periyava : Ashtoththara Sadha Namavali : 23

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி 
ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி 
தீர்த்தம் அர்ப்பணம்

"தபனீய திரஸ்காரி சரீராய நமோ நம" (23)

"தங்கத்தை மங்க வைக்கும் சரீர காந்தியுடையவருக்கு நமஸ்காரம்" (23)

"Obeisance to Him whose body lustre puts the shine of gold to shame" (23)

"தங்கமும் மங்கிப்போகும் திருமேனிப் பொலிவு கண்டு

பங்கமில் வைரம் வெட்கும் முகமலர்ப் பொலிவு கண்டு

மங்கையர் சூடுமந்த மென்மலர் வெட்கிநிற்கும்

பங்கயப் பாதம் கண்டு, வணங்கினோம் போற்றி போற்றி" (23)

Wednesday, May 13, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 22

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி
ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"சுதாமதுரிமா மஞ்சு பாஷணாய நமோ நம" (22)

"அமிருதம் போன்ற மதுரமான இனிய வாக்குடையவருக்கு நமஸ்காரம்" (22)

 "Obeisance to Him whose voice is pleasing and sweet as ambrosia" (22)

"பொருள்நிறை வாக்கால் மதுர அமுதூறும் வாக்கால்
மருளரும் வாக்கால் உயர் நலம்தரும் வாக்கால்                              அருள்நிறை தெய்வ வாக்கால் வாழ்விக்க வந்த எங்கள்
திருநிறைச் செல்வன், முனிவன், சங்கரன்தாள் போற்றி போற்றி" (22)