Tuesday, June 30, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 70

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"சாந்திவ்ரிஷ்டிப் ப்ரதாமோக ஜலதாய நமோ நமஹ:" (70)

"சாந்தி மழை பொழியும் குறி தப்பாத மேகமாக இருப்பவருக்கு நமஸ்காரம்" (70)

"Obeisance to Him who is the unfailing cloud that rains peace to the devotees" (70)

எத்தனை படிப்பிருந்தும், எத்தனை செல்வம் வந்தும்
இத்தரை மீது ஏதும் சாந்தியைக் கண்டோமில்லை
அத்தவ முனிவன் என்னும் மாமழை மேகம் இங்கே
நித்தமும் சாந்தி நல்க எத்தவம் செய்தோமம்மா! (70)

Periyava : Ashtothara Sadha Namavali : 69

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"ப்ராந்தி மேகோச்சாடன ப்ரபஞ்ஞாய நமோ நமஹ:" (69)

"ப்ராந்தி என்னும் மேகத்தைக் கலைக்கிற புயல் காற்று போன்றவருக்கு நமஸ்காரம்" (69)

Obeisance to Him who is the storm wind that disperses the clouds of delusion (69)

தினம்நமை மயக்கி நிற்கும் மாயையாம் இருளையெல்லாம்
மனமெனும் நிலவைச் சூழும் மோகமேகத்தையெல்லாம்
சினம்கொண்ட ஊழிக்காற்றாய், நொடியிலே விரட்டி அன்பர்
இனம்தரும் ஞானபோதன் சரண் என்றும் போற்றி போற்றி (69)

Periyava : Ashtothara Sadha Namavali : 68

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"மூலாஞ்ஞான பாதிதாத்ம முக்திதாய நமோ நமஹ:" (68)

"ஆதிகாரணமான அஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்ட்ட ஆத்மாவுக்கு விடுதலை தருபவருக்கு நமஸ்காரம்" (68)

Obeisance to Him who gives self-realization and release (atma-mukti) to sufferers of pains stemming from ignorance of the primal root cause (68)  

ஆயிரம்கோடி ஜன்மம் அந்தகாரத்தில் நின்றுனைப்
பாயிரமேதும்பாடி பரவாதிருந்தேனை, பாவியை
நீயிரங்கி அணைத்து அடைக்கலம் தந்தருள்வாயிங்கு
தாயிரங்காவிடின் சேயுயிர் வழ்வதெங்கே சொல்லுவயே (68)

Sunday, June 28, 2015

SadhGurunathar Muralidhara Swamiji : Ekadhasi Padal

சத்குருநாதன் மலரடி பணிந்தேன்
சத்சங்கம் அதில் நிம்மதி அடைந்தேன்
சத்விஷயம் செவி அருந்திடச் சுவைத்தேன்
சத்குணம் வளரவே கைதொழுதிருந்தேன் (1)

நாம ருசி தந்த சத்குருநாதன்
நாமமாய் வந்த என்குருநாதன்
நாமோபதேசம் செய்தருள் செய்தான்
நாமும் வாழ நல்வழி தந்தான் (2)

ஏகாதசி நாள் ஆஸ்ரமம் செல்வோம் 
ஏக்கம் தணிந்திட பூஜையும் காண்போம்
ஏகாந்தமாய் அமர் குருவடி பணிவோம்
ஏகமாய் வாழ்த்தும் பெற்றுய்ந்திடுவோம் (3)

"குருஅருள் பூர்ணம்" என்ற குருநாதன்
பெரும்க்ருபையே உரு எங்கள் குருநாதன்
திருவருளே வடிவெங்கள் குருநாதன்
"குருஜி" என வரும், எங்கள் குருநாதன் (4)

நற்கதைகள் சொல்வார் மனதைபண் படுத்திடுவார்
கற்பனைக்கும் எட்டாத அற்புதங்கள் செய்திடுவார்
சொற்களில் சொலவொண்ணா கற்பகம் எனவந்து
நற்பதம் தந்திடுவார் எங்கள் குருநாதன் (5)

அறிஞர்கள் போற்றிடும் எங்கள் குருநாதன்
சிறியோரும் விரும்பும் எங்கள் குருநாதன்
வறியவரும் தொழும் எங்கள் குருநாதன்
பரிந்தெமைக் காத்திடும் எங்கள் குருநாதன் (6)

கண்ணனைப் பாடுவார் எங்கள் குருநாதன்
முக்கண்ணனையும் போற்றும் எங்கள் குருநாதன்
எண்ணமெலாம் நிறைந்த எங்கள் குருநாதன்
திண்ணமாய் நம்பிடுவோம் எங்கள் குருநாதன் (7)

அரியையே பாடுவார் எங்கள் குருநாதன்
அரனையும் போற்றுவார் எங்கள் குருநாதன்
தரணியெலாம் போற்றும் எங்கள் குருநாதன்
பரனையிங்கடைய சரண் எங்கள் குருநாதன் (8)

எந்தன் மனம் தன்னில் நின்ற குருநாதா!
எந்தன் அகமே நீயும் வந்துவிட வேணும்!
உந்தன் கர ஆசி தந்து விட வேணும்
உந்தன் அருள் நானும் கொண்டு விட வேணும் (9)

உந்தன் பதமே நினைக்கும் நெஞ்சம் தரவேணும் 
உந்தன் பதசேவை கொஞ்சம் தரவேணும்
உந்தன் அடியாரின் நற்பந்தம் தரவேணும்
உந்தன் அருகிருக்கும் சொந்தம் தர வேணும் (10)

Pathathi Kesamai Periyava paatu

நாளை (29.6.2015) அன்று, அனுஷம்.

இன்றே கூட, சில இடங்கலில் அனுஷம் கொண்டடுகிறார்கள் : ஞாயிற்று கிழமையாயிருப்பதால், நிறைய பேருக்குக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும் இல்லையா!

இந்த நாளில், பெரியவாளை, பாதாதி கேசாந்தம் பாடி அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. பாதமலர்களுக்கே ஆயிரம் பாடல் பாடலாம்! ஆனாலும், எனக்குத் தெரிந்த தமிழில், பெரியவாளைப் பற்றி, பாதம் முதல் தலைமுடியப் பாடி அனுபவித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அனுஷத்திற்கு அனுஷமாவது, ஒரு முறையாவது, ஒரு கணமாவது, பெரியவாளைப் பற்றி நினைக்க முடிவதும் பெரியவாளின் அனுக்ரஹம்தான்.

பெரியவா சரணம்.

பாதரக்ஷை:

பொற்பதமதைத் தாங்கும் மூவுலகும் வணங்கும்
அற்புதன் பாத ரக்ஷையே - சொற்களால்
விளங்குமோ உந்தன் பெருமை கற்களால்
விளங்குமோ கோவிலின் சிறப்பு (1)

பாதமலர்:

பொன்மலர்த்தாள் போற்றி! அடியார்கள் மனதிலே
நின்றிடும் பதம் போற்றி! - என்றுமே
எங்களைக் காத்திடும் மங்கலம் சேர்த்திடும்
செங்கமலத் தாளிணை போற்றியே! (2)

திருக்கால்கள்:

அடியார்கள் தமைகாக்க நடந்த கால்கள்
செடியாய வல்வினையும் தீர்க்கும் - கொடிய
பிணியெலாம் மாற்றும் வளமெலாம் சேர்க்கும்
பணிந்திடும் அன்பர் அவர்க்கே (3)

திருவயிறு:
 
மண்ணொரு நாளுண்டீர்! நஞ்சதுவும் தானுண்டீர்!
விண்ணவரேத்தும் மாயனாய் சிவனுமாய் - அண்ணலே!
அன்னாளுண்ட அனைத்தும் மிகுதியோ? திருவயிறு
இன்னாள் உபவாசம் இட்டீர்! (4)

திருமார்பு:

திருவாசம் புரிகின்ற பொலிகின்ற திருமார்பு
கருவாசம் அகற்றிடும் கைதொழ - நறுவாசம்
வீசும் துளபமும் ருட்ராக்ஷ மாலையும்
பேசுமே உந்தன் சிறப்பு (5) 

திருக்கரங்கள்:

அறம்வளர் நாயகன் கரமலர் அருள்வரம்
பரம், பொருள், இதம்தரும் சுகம்தரும் - சிறந்துயர்
இனம் குலம் குணம்தரும் வளம்தரும்
தினம்தொழும் அன்பருக் கென்றுமே (6)

திருத்தண்டம்:

நீதி தேவதைத் தாங்குசெங்கோலிதோ?
ஆதி வினைதீர்க்கும் வேலிதோ? - சோதிப்
பிழம்பவன் ஏந்திடும் தண்டமே அவன்தன்
கழலிணை பணியவே அருள் (7)

திருக்கழுத்து:

கறையிலா வாழ்வுகண்டு நஞ்சுண்ட கறையுமிங்கேதும் 
உரையாது ஓடியதோ? விமலா - நிறையினோர் (நிறையின் ஓர்)
உருவாய் வந்த நீலகண்டா, யாம்பணியும்
குருவே, வந்தெழுந்து அருளுகவே (8)

திருமுக மண்டலம்:

அறுமுகம் எல்லாம் ஒருமுகமாய் வந்த
குருமுகம், என்றும் நமக்கு - அருள்முகம்
மனங்குவித்து ஒருமுகமாய்ப் பணிந்தார்க்கு
தினமுமின்பம் தருமுகம் வாழியவே (9)

திரு அதரமும் குமிழ் சிரிப்பும்:

பொன்முகமதனில் ஒளிரும் செவ்வதரமும் 
இன்முகமதனில் கமழ் குமிழ்சிரிப்பும் - உன்முகமதில்
கண்டோம்! மெய்மறந்திருந்தோம்! வேறெதும்
வேண்டோம்! சரண் நீயே! (10)

திருநாசியும் விடும் மூச்சும்:

உலகத்து உயிரெலாம் உயிர்த்திடும் ஒரூமுச்சாய்
நலம்செயும் வேதத்தின் உயிர்மூச்சாய் - நிலமென்னும்
நல்லாளும் நிம்மதியாய் விடும் மூச்சாய்வந்த
நல்லானைப் பணிந்தோம் உகந்து (11)

திருநயனங்கள்:

கண்களிரண்டும் நம்மைக் காந்தமென இழுக்க
விண்மதிரவியாய் உலகிற்கொளி கொடுக்க - தண்ணென்று
வாடியே வந்தவர் தாபமெல்லாம் தணிக்க
நாடினோம் உன்னை நயந்து (12)

திரு நெற்றியும் விளங்கும் திருநீறும்: 

முழுமதி முகத்திலே ஓடிடும் ஆறென
விழுமிய நெற்றியில் விளங்கிடும் - வழுவறு
நீறது போக்கிடும் வேருடன் பிணியெலாம் 
வேறெதும் உண்டோ அரண் (13)

வில்வமும் குஞ்சிதபாதமும் சாற்றிய தலை:

விரித்தசெஞ்சடையுமின்றி பிறைமதிப் புனலுமின்றி
ஹரிஹரனுவக்கும் வில்வம் தலையிலே - தரித்திங்கே
குஞ்சிதபாதம் சூடி அணியுற இருக்குமுன்னை
தஞ்சமென்றடைந்தோம் பணிந்து (14)

பலஸ்ருதி:

பாதாதிகேசமாய் ஐயனைப் படித்தார் ஜகன்
மாதாவின் இன்னருளைப் பெறுவார் - வேதாவும்
எழுதிடான் தலையெழுதின்னொருமுறை இங்கு
பழுதுடன் நாம் பிறக்குமாறு (15)

Saturday, June 27, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 67

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"தூலாஞ்ஞான விஹீனாத்ம த்ருப்திதாய நமோ நமஹ :" (67)

"தூசான அஞ்ஞானம் அற்ற ஆத்மதிருப்தியைக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (67)

"Obeisance to Him who gives self satisfaction (atma-tripti) removing the chaff of ignorance" (67)

அகமே இருக்கும் இருளை அழித்தன்
தகனே வருமுன் பதமே அளித்து
இகமும் பரமும் நிதமும் பரவும்
சுகமே அளிக்கும் குருவே சரணம் (67)

Friday, June 26, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 66

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"க்ஷய வ்ருத்தி விஹீனாத்ம சௌக்யதாய நமோ நமஹ:" (66)

"குறைவும் வளர்ச்சியும் இல்லாத ஆத்ம சுகத்தைக் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (66)

"Obeisance to Him who gives self-anandha (atma -saukyam) which has no decline or increase" (66)

பிறவாதிறவா வளராதழியா
பெறவே முடியா முடிவான நலம்
மறவாதருளும் மறைமாமுனி எம்
உறவானவனின் பதமே தொழுதேன் (66)

Thursday, June 25, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 65

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanc...hi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"க்ஷேத்ர க்ஷேத்ரஞ ப்ரத்யேக த்ருஷ்டிதாய நமோ நமஹ:" (65)

"ஸ்தூலத்தையும் சூஷ்மத்தையும் பற்றி அறிய தனிப்பார்வை கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (65)

"Obeisance to Him who gives a unique vision into what is gross (kshetra) and what is subtle (kshetrajna)" (65)

பிணி கொண்டயரும் இவ்வுடல்வேறு உள்நின்றதற்கு
அணிசெயும் ஆத்மன்வேறெனும் அறிவுதந்து
பணிசெயப் பாதம் தந்தென் தாபமெல்லாம்
தணித்தருள் குருநாதா! தொழுதனன் போற்றி போற்றி (65)

Wednesday, June 24, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 64

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"மஹாமோஹ நிவ்ருத்யார்த மந்த்ரதாய நமோ நமஹ:" (64)

"பெரும் மோஹத்திலிருந்து நிவ்ருத்தி அடைய மஹாமந்த்ரம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (64)

"Obeisance to Him who gives a mahamanthra to remove the effects of vast illusion" (64) 

உடல்மேல் ஆசை கொண்டலைந்து இங்கிந்த
உடலே நானென்று பெருமோகம் கொண்டிருந்தேனை
உடனாட்கொண்டு "பெரியவா" எனும் மந்த்ரம் தந்த
நடமாடும் தெய்வமே இங்கெழுந்தருளுகவே (64)