Sunday, June 28, 2015

SadhGurunathar Muralidhara Swamiji : Ekadhasi Padal

சத்குருநாதன் மலரடி பணிந்தேன்
சத்சங்கம் அதில் நிம்மதி அடைந்தேன்
சத்விஷயம் செவி அருந்திடச் சுவைத்தேன்
சத்குணம் வளரவே கைதொழுதிருந்தேன் (1)








நாம ருசி தந்த சத்குருநாதன்
நாமமாய் வந்த என்குருநாதன்
நாமோபதேசம் செய்தருள் செய்தான்
நாமும் வாழ நல்வழி தந்தான் (2)

ஏகாதசி நாள் ஆஸ்ரமம் செல்வோம் 
ஏக்கம் தணிந்திட பூஜையும் காண்போம்
ஏகாந்தமாய் அமர் குருவடி பணிவோம்
ஏகமாய் வாழ்த்தும் பெற்றுய்ந்திடுவோம் (3)

"குருஅருள் பூர்ணம்" என்ற குருநாதன்
பெரும்க்ருபையே உரு எங்கள் குருநாதன்
திருவருளே வடிவெங்கள் குருநாதன்
"குருஜி" என வரும், எங்கள் குருநாதன் (4)

நற்கதைகள் சொல்வார் மனதைபண் படுத்திடுவார்
கற்பனைக்கும் எட்டாத அற்புதங்கள் செய்திடுவார்
சொற்களில் சொலவொண்ணா கற்பகம் எனவந்து
நற்பதம் தந்திடுவார் எங்கள் குருநாதன் (5)

அறிஞர்கள் போற்றிடும் எங்கள் குருநாதன்
சிறியோரும் விரும்பும் எங்கள் குருநாதன்
வறியவரும் தொழும் எங்கள் குருநாதன்
பரிந்தெமைக் காத்திடும் எங்கள் குருநாதன் (6)


கண்ணனைப் பாடுவார் எங்கள் குருநாதன்
முக்கண்ணனையும் போற்றும் எங்கள் குருநாதன்
எண்ணமெலாம் நிறைந்த எங்கள் குருநாதன்
திண்ணமாய் நம்பிடுவோம் எங்கள் குருநாதன் (7)


அரியையே பாடுவார் எங்கள் குருநாதன்
அரனையும் போற்றுவார் எங்கள் குருநாதன்
தரணியெலாம் போற்றும் எங்கள் குருநாதன்
பரனையிங்கடைய சரண் எங்கள் குருநாதன் (8)


எந்தன் மனம் தன்னில் நின்ற குருநாதா!
எந்தன் அகமே நீயும் வந்துவிட வேணும்!
உந்தன் கர ஆசி தந்து விட வேணும்
உந்தன் அருள் நானும் கொண்டு விட வேணும் (9)


உந்தன் பதமே நினைக்கும் நெஞ்சம் தரவேணும் 
உந்தன் பதசேவை கொஞ்சம் தரவேணும்
உந்தன் அடியாரின் நற்பந்தம் தரவேணும்
உந்தன் அருகிருக்கும் சொந்தம் தர வேணும் (10)

No comments:

Post a Comment