பெரியவா நாமாவளியான "பாரதிக்ருத ஜிஹ்வாக்ர நர்த்தனாய நமோ நம" என்ற நாமாவளிக்கு பாடல் எழுதும்போது, "பெரியவாளே சரஸ்வதிதானே" என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவரது நாக்கில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுவது இருக்கட்டும், அவரே சரஸ்வதிதானே! சிவ ரூபமாய், சக்தி ரூபமாய் வந்தவர்தானே! அந்த சக்தி ரூபத்தில் சரஸ்வதி ரூபமும் அடக்கம் தானே! அதனால்தான், "வாணி" என்றே பாடல் முழுக்க அவரைப் பற்றி வந்தது போலிருக்கிறது!
பெரியவாளை சரஸ்வதியாய் சிந்தனை பண்ணிப் பார்க்கும்போது, "சரஸ்வதி" ராகத்தில் அமைந்த பாபனாசன் சிவன் அவர்களது, "சரஸ்வதி, தயை நிதி நீ கதி" என்ற பாடலும் மனதில் ஓடியது.
பெரியவாளின் பெயருமே, "சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி" என்று, "சரஸ்வதி" என்ற நாமத்தைத் தரித்திருக்கிறதே!
அந்தப் பாடலை அப்படியே அடி ஒற்றி, பெரியவா மேல் பாட வேண்டும்போலத் தோன்றியது. அந்தப் பாமாலை இதோ:
ராகம் : சரஸ்வதி
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - இந்த்ர
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - சேகரேந்த்ர
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - சந்த்ர சேகரேந்த்ர
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - இன்னருள் தந்திடுவாய், பாரதி! (ஸரஸ்வதி)
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - சேகரேந்த்ர
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - சந்த்ர சேகரேந்த்ர
ஸரஸ்வதி, குலநிதி, நீ கதி - இன்னருள் தந்திடுவாய், பாரதி! (ஸரஸ்வதி)
கண்மலர் கனிந்தருள் கருணையும் தீக்ஷையும்,
கைமலர் தரும் அருள் ஆசியும் வேண்டுமே (ஸரஸ்வதி)
கைமலர் தரும் அருள் ஆசியும் வேண்டுமே (ஸரஸ்வதி)
பதமலர் பணிந்திடும் பக்தரைக் காத்தருள்
முகமலர் தரும் குறு நகையுமே வேண்டுமே (ஸரஸ்வதி)
முகமலர் தரும் குறு நகையுமே வேண்டுமே (ஸரஸ்வதி)
ரா. கணபதி அவர்களின் புத்தகமான "சங்கரர் என்கிற சங்கீதம்" பின்பக்க அட்டைப் படத்தில், பெரியவளான சரஸ்வதியே, சரஸ்வதிக்குப் பூஜை பண்ணுவது போன்ற படம் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.
அந்த பின் பக்க அட்டையின் போடோடோவினையும் இணைத்துள்ளேன்.
No comments:
Post a Comment