இன்று, மூல நக்ஷத்ரம். ஹனுமனுக்கு உகந்த நாள்.
ஹனுமனை எண்ணும்போது, மூல நக்ஷத்ரதன்று, பெரியவா மௌன விரதம் இருப்பது ஞாபகம் வருகிறது.
தென்னிந்தியாவிலே ஹனுமனுக்கு உளுந்தாலான வடை மாலையும், வட இந்தியாவிலே, உளுந்தாலான ஜாங்கிரியும் சமர்ப்பிப்பது பற்றி சொன்னதும் நினைவு வருகிறது.
ஹனுமன் பற்றி ஒரு பாடல்.
ராகம் : ஜோன்புரி?? (ஆடுகின்றானடி தில்லையிலே மெட்டு)
அனுமனைப் பணி மனமே! தினமே!
அனுமனை பணி மனமே! (பல்லவி)
அனுமனை பணி மனமே! (பல்லவி)
அஞ்சனை மைந்தனை, வாயுவின் புதல்வனை
சஞ்சலம் தீர்ந்திட, மங்கலம் சேர்ந்திட (அனுபல்லவி)
சஞ்சலம் தீர்ந்திட, மங்கலம் சேர்ந்திட (அனுபல்லவி)
மூலத்தில் பிறந்திட்ட ஜோதியவன்
மூலிகை மலையையே தூக்கினவன்
ராமலக்ஷ்மணருக்கு உயிர் கொடுத்தான் ராம
நாமம்பஜிப்பவர்க்கோ வளம் கொடுப்பான் (சரணம்)
மூலிகை மலையையே தூக்கினவன்
ராமலக்ஷ்மணருக்கு உயிர் கொடுத்தான் ராம
நாமம்பஜிப்பவர்க்கோ வளம் கொடுப்பான் (சரணம்)
ராமனுக்காகவே லங்கை சென்றான் அங்கே
ராவணன் படையெல்லாம் த்வம்சம் செய்தான்
ஸீதையின் சோகத்தை மாற்றி வைத்தான் நல்ல
பாதையைக் காட்டி நம்மைக் காத்திடுவான் (சரணம்)
ராவணன் படையெல்லாம் த்வம்சம் செய்தான்
ஸீதையின் சோகத்தை மாற்றி வைத்தான் நல்ல
பாதையைக் காட்டி நம்மைக் காத்திடுவான் (சரணம்)
No comments:
Post a Comment