இன்று காலையில், "நவ நவா காங்க்ஷ்ய தர்ஷனாய நமோ நமஹ:" என்ற நாமத்திற்குப் பாடல் எழுதியதிலிருந்தே, பெரியவாளின் பல்வேறு காட்சிகள் பற்றிய சிந்தனை.
பெரியவாளின் பல்வேறு காட்சிகளையும் பரிமாணங்களையும், இரண்டு பாடல்களில் வடித்துவிட முடியுமா என்ன?
ஒவ்வொறு முறை பார்க்கும்போதும் 'பார்த்துகிட்டே இருக்கத் தோணுது" இல்லையா!! ஒவ்வொறு முறையும் புதியதாய்ப் பார்ப்பதுபோல்தானே தோன்றுகிறது!
ஒவ்வொறு முறை பார்க்கும்போதும், ஒரு புதிய முகம்தானே தோன்றுகிறது!
சிங்கார வேலவனுக்கு அறு முகம். எங்கள் சிங்காரப் பெரியவாளுக்கோ, கோடி முகம்.
ஒவ்வொறு முறையும், பார்க்கும் பக்தர்களின் மனோ நிலைக்கேற்ப, ஒரு முகம் காட்டி அனுக்ரஹம் செய்யும் பெரியவாளுக்கும், அந்த முகங்களை எல்லாம் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடையும் பக்தர்களுக்கும், இந்தப் பாடல் அர்ப்பணம்.
குறுநகை மின்னக் கவர்ந்திடும் ஒரு முகம்
அருந்தவக் கோலம் ஒளிர்ந்திடும் ஒரு முகம் (1)
அருந்தவக் கோலம் ஒளிர்ந்திடும் ஒரு முகம் (1)
பெருமருள் பொங்கிடக் பரிந்திடும் ஒரு முகம்
கருணையின் கடலாய்க் கனிந்திடும் ஒரு முகம் (2)
உறுவினை தீர்க்கவே விரைந்திடும் ஒரு முகம்
வரும் அடியார்க்கெலாம் வழங்கிடும் ஒரு முகம் (3)
தருவதற்கென்றே தோன்றிய ஒரு முகம்
இருபதம் துணையெனத் தந்திடும் ஒரு முகம் (4)
ஒருகை தூக்கி வாழ்த்திடும் ஒரு முகம்
இருகை கூப்பி இருந்திடும் ஒரு முகம் (5)
நறுமலர் அரியணை அமர்ந்திடும் ஒரு முகம்
திருமகள் அவளெனத் திகழ்ந்திடும் ஒரு முகம் (6)
அறுமுகன் அவன்வேல் தாங்கிடும் ஒரு முகம்
மறுவறு துளபமே சூடிடும் ஒரு முகம் (7)
எருதது ஏறிடும் ஏறாய் ஒரு முகம்
உறுதுணை 'நான்' என வந்திடும் ஒரு முகம் (8)
மாறும் இம்முகங்களுண்டு, மாறாத கருணையுண்டு
வேறு கதியுமுண்டோ நானிலத்தில் எங்களுக்கும்?
No comments:
Post a Comment